தளபதி Swag - சாண்டி, தர்ஷனை தொடர்ந்து தளபதி பாடலுக்கு Dance ஆடிய லாஸ்லியா!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Oct 10, 2019 02:25 PM
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த சில நாட்களுக்கு முன் நிறைவடைந்த நிலையில், இறுதிப்போட்டி வரை பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த போட்டியாளர்கள் தற்போது வெளியுலகில் மக்களின் அன்பை பெற்று வருகின்றனர்.

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் டைட்டிலை முகென் ராவும், இரண்டாவதாக சாண்டியும் வெற்றி பெற்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த நிலையில், சமீபத்தில் டான்ஸ் மாஸ்டர் சாண்டி தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘பிகில்’ படத்தின் இடம்பெற்ற ‘வெறித்தனம்’ பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டிருந்தார்.
அவரைத் தொடர்ந்து மற்றொரு பிக் பாஸ் பிரபலமான, மக்கள் மனதில் இடம்பிடித்த தர்ஷனும், தளபதி விஜய்யின் ‘வெறித்தனம்’ பாடலுக்கு நடனமாடிய வீடியோ வெளியாகி வைரலானது. இந்நிலையில், தற்போது லாஸ்லியாவும் தளபதி விஜய்யின் சூப்பர்ஹிட் பாடல் ஒன்றுக்கு டான்ஸ் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.
‘சச்சின்’ திரைப்படத்தில் விஜய் தனது சொந்த குரலில் பாடிய கானா பாடலான ‘வாடி வாடி கைப்படாத சீடி’ பாடலுக்கு டான்ஸ் ஆடியுள்ளார். லாஸ்லியாவுடன் சேர்ந்து சில பெண்களும் உற்சாகமாக தளபதி விஜய்யின் பாடலுக்கு நடனமாடிய வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.
. Had a great time dancing with these lovelies yesterday 😍😻 pic.twitter.com/y8ZW7SGQtq
— Losliya Mariyanesan Fan💙 (@Losliyamaria96) October 9, 2019