“அதுக்காக என்ன மன்னிச்சிடுங்க...”- பிக் பாஸ் முடிந்து லாஸ்லியா பகிர்ந்த முதல் Insta போஸ்ட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி நிறைவடைந்த நிலையில், மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான போட்டியாளரான லாஸ்லியா முதன்முதலாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Losliya says I'm very sorry, her first Insta Post after Bigg Boss

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் 7 கோடி வாக்குகளை பெற்று டைட்டிலை தட்டிச் சென்றார் மலேசியாவைச் சேர்ந்த முகென் ராவ். இரண்டாவது வெற்றியாளராக டான்ஸ் மாஸ்டர் சாண்டி அறிவிக்கப்பட்டார். அவரையடுத்து 3வது இடத்தை லாஸ்லியாவும், 4வது இடத்தை ஷெரினும் பெற்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு போட்டியாளர்கள் தங்களது சமூக வலைதள பக்கங்களில் மக்களின் பேராதரவுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் “முதலில் நான் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். எனக்கு ஆதரவளித்து எல்லையற்ற அன்பைக் கொடுத்த அனைவருக்கும் நன்றி. என்னைப் பொறுத்தவரையில் நன்றி என்பது மிகச் சிறிய வார்த்தையாக தான் கருதுகிறேன். அது அனைவருக்கும் போதுமானதாக இருக்காது. நாம் உங்கள் அனைவரையும் மிகவும் நேசிக்கிறேன். நீங்கள் அளித்த இந்த ஆதரவு எனக்கு ஆச்சர்யமாக உள்ளது. நான் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இல்லாததற்கும், ஒவ்வொருவரின் கேள்விகளுக்கும் பதிலளிக்காததற்கு என்னை மன்னித்துவிடுங்கள். சத்தியமாக உங்கள் அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்வேன். ஐ லவ் யூ சோ சோ மச்” என்று கூறியுள்ளார்.