”வாழ்க வளமுடன்… உயிர்த் தோழனே”… இளையராஜாவை வாழ்த்திய பாரதிராஜா- viral Pic

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இளையராஜாவை வாழ்த்தி பாரதிராஜா பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

Bharathiraja wished ilaiyaraajaa with viral pic

Also Read | #BeSafeTamilCinema “அவர்கள் அபாயத்தில் இருக்கின்றனர்”… தயாரிப்பாளர் SR பிரபுவின் வைரல் Tweet!

இசைஞானி இளையராஜா வழிபாடு…

சிறப்பு மிக்க திருக்கடையூர் கோயிலில் இசைஞானி இளையராஜா குடும்பத்துடன் வந்து இன்று காலை சதாபிஷேகம் செய்த பின் சாமி தரிசனம் செய்தார். நேற்று மாலை கோயில் கொடிமரம் அருகே இளையராஜா கோ பூஜையும் கணேச பூஜையும் செய்தார். மேலும் நூறு கால் மண்டபத்தில் 84 கலசங்கள் வைக்கப்பட்டு ஆயுள் ஹோமம் நவக்கிரக ஹோமம், மிருத்யுஞ்ஜய ஹோமம் நடைபெற்றது. இளையராஜாவுடன் இயக்குனர் பாரதிராஜா மற்றும் இளையராஜாவின் குடும்பத்தினர்களான சகோதரர் கங்கை அமரன், அவரது மகன் பிரேம்ஜி, இளையராஜா மகன் கார்த்திக் ராஜா, மகள் பவதாரணி ஆகியோர் வந்திருந்தனர். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.

Bharathiraja wished ilaiyaraajaa with viral pic

பாரதிராஜா பகிர்ந்த புகைப்படம்…

இதையடுத்து தற்போது பாரதிராஜா இளையராஜாவுடன் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அந்த புகைப்படத்தோடு “வாழ்க.. என்றும் வளமுடன்.. என்றும் வாழ்கவே.. உயிர் தோழனே...” எனக் கூறியுள்ளார்.  இந்த புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகியுள்ளது.

Bharathiraja wished ilaiyaraajaa with viral pic

இளையராஜா பாரதிராஜா நட்பு….

தமிழ் சினிமாவின் இருபெரும் ஆளுமைகளான இளையராஜாவும், பாரதிராஜாவும் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே நண்பர்கள். தேனி மாவட்டத்தில் பிறந்த வளர்ந்த இருவரும் மேடை நாடகங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர். கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் சினிமாவுக்குள் நுழைந்தவர்கள். பாரதிராஜா- இளையராஜா கூட்டணியில் உருவான படங்களின் பாடல்களும், பின்னணி இசையும் சாகாவரம் பெற்றவையாக இப்போதும் கருதப்படுகின்றன. கடைசியாக இருவரும் என் உயிர்த் தோழன் திரைப்படத்திலும், தெக்கத்திப் பொண்ணு தொலைக்காட்சி தொடரிலும் இணைந்து பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Bharathiraja wished ilaiyaraajaa with viral pic

Also Read | “நம் இயக்குனரோட…” மிரட்டலான ’விக்ரம்’ மேக்கிங்… ராஜ்கமல் நிறுவனம் வெளியிட்ட BTS வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Bharathiraja wished ilaiyaraajaa with viral pic

People looking for online information on Bharathiraja, Bharathiraja wished ilaiyaraajaa, Ilaiyaraajaa will find this news story useful.