தருமபுர ஆதினத்தின் திருக்கடையூர் கோயிலில் இளையராஜா சாமி தரிசனம்.. முழு தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இசைஞானி இளையராஜா, குடும்பத்துடன் தருமபுரம் ஆதீனத்திற்கு பாத்தியப்பட்ட திருக்கடையூர் கோயிலுக்கு சென்ற புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Ilaiyaraaja visiting thirukadaiyur temple with his family

Also Read | ”ஹரி சார் upgrade ஆகிட்டாரு… இது 2.0”… யானை Press Meet-ல் பிரியா பவானி சங்கர் பகிர்ந்த சீக்ரெட்!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே அமைந்துள்ள திருக்கடையூர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. பன்னிரு திருமுறைகளில் தேவாரம் பாடல் பெற்ற காவிரிக்கரை தலங்களில் மிக முக்கிய தலம் திருக்கடையூர். அபிராமி சமேத அமிர்த கடேஸ்வரர் இணைந்த கோயில் அழைக்கப்படுகிறது. அபிராமி அந்தாதி பாடிய அபிராமி பட்டர் பெயர்பெற்ற கோயிலும் இது தான்.

மார்க்கண்டேயருக்கு என்றும் பதினாறு என வரம் அளித்த திருக்கோயிலும் இதுதான். திருஞானசம்பந்தப் பெருமான், திருநாவுக்கரசர் பெருமான், சுந்தர மூர்த்தி நாயனார், திருமூலர், சேரமான் பெருமான் நாயனார், சேக்கிழார் பெருமான், பரணதேவ நாயனார், நக்கீர தேவ நாயனார் ஆகியோர் பாடிய திருத்தலம இது.

Ilaiyaraaja visiting thirukadaiyur temple with his family

இந்த கோயிலில் 60, 70, 80, 90, 100 வயதை பூர்த்தி செய்தவர்கள் பீமரதசாந்தி, விஜயரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம், பூரணாபிசேகம் மற்றும் அதில் ஆயுள் ஹோமங்கள் செய்து சிவனையும் அம்மையாரையும்

தரிசிக்க நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது  நம்பிக்கை.

Ilaiyaraaja visiting thirukadaiyur temple with his family

இத்தகைய சிறப்பு மிக்க திருக்கடையூர் கோயிலில் இசைஞானி இளையராஜா குடும்பத்துடன் வந்து இன்று காலை சதாபிஷேகம் செய்த பின் சாமி தரிசனம் செய்தார். நேற்று மாலை கோயில் கொடிமரம் அருகே இளையராஜா கோ பூஜையும் கணேச பூஜையும் செய்தார். மேலும் நூறு கால் மண்டபத்தில் 84 கலசங்கள் வைக்கப்பட்டு ஆயுள் ஹோமம் நவக்கிரக ஹோமம், மிருத்யுஞ்ஜய ஹோமம்  நடைபெற்றது.

Ilaiyaraaja visiting thirukadaiyur temple with his family

இளையராஜாவுடன் இயக்குனர் பாரதிராஜா மற்றும் இளையராஜாவின் குடும்பத்தினர்களான சகோதரர் கங்கை அமரன், அவரது மகன் பிரேம்ஜி, இளையராஜா மகன் கார்த்திக் ராஜா, மகள் பவதாரணி ஆகியோர் வந்திருந்தனர்.

Ilaiyaraaja visiting thirukadaiyur temple with his family

Also Read | மின்னல் முரளி பாத்துட்டு.. கமல் பகிர்ந்த விஷயம்.. வியப்பில் ஆழ்ந்த காளிதாஸ்.. 'Exclusive'

தொடர்புடைய இணைப்புகள்

Ilaiyaraaja visiting thirukadaiyur temple with his family

People looking for online information on Ilaiyaraaja, Ilaiyaraaja visits thirukadaiyur temple, Thirukadaiyur temple will find this news story useful.