“STAY TUNED”… “மே 18, மாலை 6 மணிக்கு ஒரு அறிவிப்பு வருது”…. இசைஞானி பரபரப்பு ட்வீட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இளையராஜா வெளியிட்டுள்ள டிவீட் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Isaignani Ilaiyaraaja viral tweet about special programme

இளையராஜா 75…

இதுவரை 1000க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்ததன் மூலம் பல்லாயிரம் பாடல்களுக்கு இசையமைத்தவர் இசைஞானி இளையராஜா. தமிழகம், இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் இளையராஜாவுக்கான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அவர்களுக்காக உலகம் முழுவதும் கச்சேரிகளை இளையராஜா கடந்த வருடங்களில் நடத்தி வந்துள்ளார். இளையராஜாவின் 75 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பு தமிழகம் முழுவதும் அவரின் இசைக் கச்சேரிகள் நடந்தன. அதில் பல திரையுலக பிரமுகர்கள் கலந்துகொண்டு இளையராஜாவை வாழ்த்தி அவருடனான நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர்.

Isaignani Ilaiyaraaja viral tweet about special programme

ராக் வித் ராஜா…

இதையடுத்து சமீபத்தில்  சென்னையில் இளையராஜாவின் ராக் வித் ராஜா என்ற கச்சேரி நடந்தது. இந்நிலையில் சென்னை தீவுத்திடலில் மார்ச் 18 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடந்த கச்சேரியில்  முன்னணி இசைக் கலைஞர்களான மனோ, விபாவரி, உஷா உதூப், பவதாரணி, தேவி ஸ்ரீ பிரசாத், சுவேதா மோகன், எஸ்பி சரண், கார்த்திக் ராஜா, யுவன் மற்றும் பிரேம்ஜி அமரன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.  அதுபோல பார்வையாளர்களாக பல தமிழ் சினிமா பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

Isaignani Ilaiyaraaja viral tweet about special programme

இளையராஜாவின் வைரல் டிவீட்…

இந்நிலையில் இப்போது இளையராஜா அடுத்தடுத்து கச்சேரிகளை தமிழகத்தில் நடத்த உள்ளார். அது சம்மந்தமான டிவீட் ஒன்றை சமீபத்தில் அவர் பகிர்ந்துள்ளார். அதில் “காத்திருங்கள். நாளை மாலை 6 அறிவிப்பு.  தனித்துவமிக்க நிகழ்வு ஜூன் 5 ஆம் தேதி” என அறிவித்துள்ளார். ஏற்கனவே இளையராஜாவின் இசைக்கச்சேரி ஜுன் 2 ஆம் தேதி கோயம்புத்தூரின் கொடிசியா மைதானத்தில் நடக்க உள்ளது. இதையடுத்து அவரின் டிவிட்டின் மூலம் அடுத்த கச்சேரி பற்றிய அறிவிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

 

“STAY TUNED”… “மே 18, மாலை 6 மணிக்கு ஒரு அறிவிப்பு வருது”…. இசைஞானி பரபரப்பு ட்வீட் வீடியோ

Tags : A, Isaignani

Isaignani Ilaiyaraaja viral tweet about special programme

People looking for online information on A, Isaignani will find this news story useful.