'தல அஜித்துடன் 3 படமா?' - போனி கபூர் விளக்கம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தல அஜித்துடன் 3 திரைப்படங்கள் ஒப்பந்தம் செய்திருப்பதாக வெளியான தகவலுக்கு தயாரிப்பாளர் போனி கபூர் விளக்கம் அளித்துள்ளார்.

Boney Kapoor clarifies on 3 film deal with Thala Ajith after Nerkonda Paarvai

மறைந்த நடிகை ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரிக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடித்த ‘பிங்க்’ திரைப்படத்தின் ரீமேக்கான இப்படத்தில் அஜித்துடன் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தாரியங் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், ரசிகர்களின் மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றதுடன், படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது.

இந்நிலையில், அஜித்துடன் 3 திரைப்படங்கள் போனி கபூர் ஒப்பந்தம் செய்திருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

அவரது ட்வீட்டில், ‘அஜித்துடன் 3 படங்கள் ஒப்பந்தம் செய்திருப்பதாக பொய்யான தகவல்கள் மீடியாவில் பரவி வருகிறது. அதை தெளுவுப்படுத்துகிறேன். நேர்கொண்ட பார்வைக்கு பிறகு ஒரு ஆக்ஷன் படத்தில் பணியாற்றுகிறோம். அவருடன் ஒரு ஹிந்தி படம் பண்ண வேண்டும் என விரும்புகிறேன். அவர் இன்னும் உறுதி செய்யவில்லை’ என தெரிவித்துள்ளார்.

‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கவிருக்கும் ‘தல 60’ திரைப்படத்தை ஹெச்.வினோத் இயக்கவிருக்கிறார். ஆக்ஷன் படமாக உருவாகவிருக்கும் இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.