அஜித் -யுவன் காம்போவில் ஒரு ராக் சாங் - லிரிக்கல் வீடியோ இன்று ரிலீஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் தல அஜித் ஹீரோவாக நடித்து வரும் படம் 'நேர்கொண்ட பார்வை'. இது ஹிந்தியில் அமிதாப் பச்சன் ஹீரோவாக நடித்த பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இந்த படம் உருவாகிறது.

Thala Ajith's Nerkonda Paarvai's EDM Song will release today

இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நீரவ் ஷா இந்த படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படத்தில் இருந்து வானின் இருள் என்ற பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்த பாடலை உமா தேவி எழுத, தீ இந்த பாடலை பாடியிருந்தார்.

இதனையடுத்து நேர்கொண்ட பார்வை படத்தில் இருந்து இடிஎம் பாடல் இன்று மாலை 6.45 மணிக்கு வெளியாகவுள்ளதாக தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார். இந்த பாடலின் பாலிவுட் நடிகை கல்கி கோச்லின் இந்த பாடலில் நடனமாடவிருக்கிறார்.