‘அஜித்தோட ஸ்டார் வேல்யூக்கு இது கொஞ்சம் கம்மி..’ - ஜோதிகா

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்த நடிகர் அஜித்குமாருக்கு நன்றி சொல்லிக் கொள்வதாக Behindwoods-க்கு நடிகை ஜோதிகா அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Jyothika speaks about Ajith's Market Value and being thankful to him for Nerkonda Paarvai

டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள 'ராட்சசி' திரைப்படத்தை கௌதம் ராஜ் இயக்கியுள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கோகுல் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் பாடல்கள், டீசர் என அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இப்படம் வரும் ஜூலை.5ம் தேதி ரிலீசாகவுள்ள நிலையில், புரொமோஷன் பணிகளில் ஜோதிகா பிசியாக உள்ளார்.

அதன் ஒரு பகுதியாக Behindwoods-ன் மாத்தியோசி வித் அக்னி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பேசிய ஜோதிகா, பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துக்கொண்டார். அப்போது அஜித் பற்றி பேசிய ஜோதிகா, ‘நேர்கொண்ட பார்வை போன்ற கதையை தேர்ந்தெடுத்து நடித்ததற்கு அஜித்திற்கு நன்றி சொல்கிறேன். அஜித் போன்ற மார்க்கெட் வேல்யூ உள்ள ஒரு பெரிய நடிகர் சமூகத்தில் பெண்களுக்கு நேரும் அவலம் பற்றிய கதையில் நடித்திருப்பது பாராட்டத்தக்கது’.

‘விஸ்வாசம் போன்ற அவரது திரைப்படங்கள் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்திருக்கும் சூழலில், தனது அடுத்தப்படத்தை சிறிய படமாக தேர்வு செய்திருப்பது பிரம்மிக்க வைக்கிறது. பல கோடி ரசிகர்களை கொண்டுள்ள அஜித் இந்த படத்தில் பேசியிருக்கும் வசனங்கள், அதன் மூலம் சொல்ல வரும் கருத்துக்களை நிச்சயம் அவரது ரசிகர்கள் பின்பற்றுவார்கள். அப்படியானால் இது எத்தனை பெரிய முயற்சி’ என அஜித்தை பாராட்டி பேசியுள்ளார்.

எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் அஜித் முதன் முறையாக இரட்டை வேடத்தில் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட்டான ‘வாலி’ திரைப்படத்தின் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஜோதிகா என்பது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் அஜித்துடன் இணைந்து நடித்துள்ளார்.

‘அஜித்தோட ஸ்டார் வேல்யூக்கு இது கொஞ்சம் கம்மி..’ - ஜோதிகா வீடியோ