''ஆட்டத்தை தொடங்க 'நேர்கொண்ட பார்வை'க்காக காத்திருக்கிறேன்''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ரோஹினி சில்வர் ஸ்கிரீன் சென்னையில் பிரபல திரையரங்குகளில் ஒன்று. அதன் மேலாளர் நிகிலேஷ் சூர்ய பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார்.

Rohini Silver Screen Manager tweets about Ajith's Nerkonda Paarvai

அதில், ''இந்த வருடம் பெரிய படங்களும் நல்ல வரவேற்பை பெற்ற சிறிய படங்களும் வெளியான வண்ணம் இருக்கின்றன. மேலும் ஒவ்வொரு வாரமும் நல்ல எண்ணிக்கைகளில் திரைப்படங்கள் வெளியாகின்றன.

எல்லா படங்களும் திரையரங்குகளில் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை. சில படங்கள் மட்டுமே மக்கள் கருத்தினால் வரவேற்பை பெற்று வருகிறது. 

தற்போது ஜூன் மாதம் முடிந்துவிட்டது. இது தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சிறப்பான மாதமாக அமையவில்லை. எந்த பெரிய படங்களும் வெளியாகவில்லை. நேர்கொண்ட பார்வைக்காக காத்திருக்கிறேன் கேமை தொடங்குவதற்காக''. என்று குறிப்பிட்டுள்ளார்.