தல அஜித்தின் நோ்கொண்ட பாா்வை "வானில் இருள்" லிரிக் வீடியோ இதோ !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகா் அஜித் குமாரின் நோ்கொண்ட பாா்வை படம் வருகின்ற ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் வானில் இருள் பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது.

Vannil Irul Song Lyrics – Ajith Kumar's Nerkonda Paarvai

சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் படத்தை தொடர்ந்து சிவாவுக்கு சற்று ஓய்வளித்து விட்டு, பாலிவுட்டில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான ‘பிங்க்’ பட படத்தின் ரீமேக் அஜித் நடிப்பில் நோ்கொண்ட பாா்வை என்ற தலைப்பில் உருவாகி உள்ளது.படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்துவிட்டது.

இந்நிலையில் படம் வருகின்ற ஆக்ஸ்ட் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன் உட்பட பலர் நடித்து வருகின்றனர்.

இந்தப் படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார். படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்

இந்நிலையில் படத்தின் வானில் இருள் பாடலின் லிரிக் வீடியோ அதிகாரப்பூா்வமாக வெளியிடப்பட்டு இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது

தல அஜித்தின் நோ்கொண்ட பாா்வை "வானில் இருள்" லிரிக் வீடியோ இதோ ! வீடியோ