'ஏன் தியேட்டரில் தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை டிரெய்லர் போடல?' - தியேட்டர் நிர்வாகம் பதில்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் தயாரிப்பில் தல அஜித் நடித்து வரும் 'நேர்கொண்ட பார்வை'. இந்த  படத்தை 'சதுரங்க வேட்டை', 'தீரன் அதிகாரம் ஒன்று' படங்களின் இயக்குநர் வினோத் இயக்கி வருகிறார்.

Vettri Theatre owner replied about Ajith's Nerkonda Paarvai

இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நீரவ் ஷா இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்த படத்தின் டிரெய்லர் திரையரங்குகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரசிகர் ஒருவர் சமீபத்தில் குரோம்பேட்டையில் உள்ள வெற்றி தியேட்டருக்கு ஸ்பைடர் மேன் ஃபார் ஃபிரம் ஹோம் படத்துக்கு சென்றதாகவும் அங்கே நேர்கொண்ட பார்வை டிரெய்லர் திரையிடப்படவில்லை எனவும் குற்றச்சாட்டு தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த வெற்றி திரையரங்க உரிமையாளர் ராகேஷ் கௌதமன், ''ஆங்கிலப் படங்கள் திரையிடும் ஆங்கிலப் படங்களின் டிரெய்லர் திரையிடப்படுவது வெகு இயல்பு. தயவு செய்து ஒரு தலைபட்சமான பார்வையை நிறுத்துங்கள். நான் ஒரு ரஜினி ரசிகன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.