’தலைவி…!’ பாண்டிச்சேரியில் ஒரு வித்தியாசமான பப்ளிக் ப்ளேசில் கங்கனா ரனாவத்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமா மற்றும் அரசியல் வரலாற்றில் தவிர்க்கவே முடியாத ஆளுமை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. இவரது வாழ்வைத் தழுவி இயக்குநர் விஜய் ’தலைவி’ படத்தை உருவாக்கி வருகிறார். இதில் ஜெயலலிதாவாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தும், எம்ஜிஆர் வேடத்தில் அரவிந்த்சாமியும் நடிக்கின்றனர்.

Kangana Ranaut spotted at Puducherry Thalaivi A L Vijay Arvind Swami book shop

இந்த படத்தை விஷ்ணு இந்தூரி, சாய்லிஷ் சிங் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். ஏற்கெனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி உள்ளது. இதில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவாக அரவிந்த் சாமியும், கங்கனாவும் கலக்கியிருந்தனர்.

இந்நிலயில் இன்ஸ்டாவில் நேற்று கங்கனாவின் புகைப்படம் ஒன்று வைரலானது. புத்தகங்கள் வாசிக்கும் ஆர்வம் கொண்ட கங்கனா ரனாவத் பாண்டிச்சேரியில் உள்ள ஒரு புத்தகக்கடைக்கு சென்றுள்ளார். அங்கு அவர் புத்தகங்களை புரட்டிப் பார்க்கும் புகைப்படங்கள் தான் அந்த வைரல் கண்டண்ட். தலைவி ஷூட்டிங் தற்போது பாண்டிச்சேரியில் நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

Entertainment sub editor