மக்கள் செல்வனுடன் நடிக்க வெய்ட் பன்றேன் - 'பிகில்' நடிகை ட்வீட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தளபதி விஜய் ஹீரோவாக நடித்துள்ள படம் 'பிகில்'. அட்லி இயக்கியுள்ள இந்த படத்தின் டிரெய்லர் வருகிற அக்டோபர் 12 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Bigil fame Reba Monica John tweets about Vijay Sethupathi

தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ள இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

பெண்கள் ஃபுட் பால் மையமாக வைத்து உருவாகி வரும் இந்த படத்தில் ரெபா மோனிகா ஜான் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய் சேதுபதியின் ஃபோட்டோ பகிர்ந்து, மக்கள் செல்வன் சேது சார் எனக்கு ஒரு இன்ஸ்பிரேஷன், எந்த பந்தாவும் இல்லாதவர். அவரிடம் நிறைய கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. உங்களுடன் பணிபுரிய காத்திருக்கிறேன் சார்'' என்று குறிப்பிட்டுள்ளார்.