பிக்பாஸ் நிகழ்ச்சியில் மாற்றம்... அறிவிப்பை வெளியிட்ட விஜய் டிவி... ஒருவேள அந்த Twist இதுதானா..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று 90 நாட்களை கடந்து வெற்றிகரமாக இறுதிப் பயணத்தை போட்டியாளர்கள் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் ஒவ்வொரு சீசனிலும் இறுதியாக நடைபெறும் Freeze டாஸ்க்கிற்காக ரசிகர்கள் காத்திருப்பது வழக்கம். அந்த வகையில் கடந்த வாரம் இந்த சீசனுக்கான Freeze டாஸ்க் நடைபெற்றது. அதேபோல் பாலாஜி மற்றும் ஆரி இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. ரம்யாவிற்கும் ஆரிக்கும் இடையே கூட கருத்து வேறுபாடுகள் அதிகரித்தது. இந்நிலையில் பாச மழைக்கு நிகராக வன்முறைகள் நிறைந்த வாரமாக கடந்த வாரம் இருந்தது என்றே சொல்லலாம். இந்நிலையில் நேற்றைய தினம் ஆஜீத் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

biggboss4tamil time changed announcement பிக்பாஸ் நிகழ்ச்சியில் புதிய மாற்றம்

இனி போட்டியாளர்கள் இருக்கப்போகும் இரண்டு வாரங்களும் மிகவும் கடுமையாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றிய புதிய அறிவிப்பை விஜய் டிவி நிறுவனம் அறிவித்துள்ளது. அதாவது ராஜா ராணி 2 சீரியல் இனிமேல் தினந்தோறும் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்றும், 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் இன்று முதல் இரவு 10 முதல் 11 மணி வரை ஒளிபரப்பாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை கேட்ட பிக்பாஸ் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பிக்பாஸில் கடைசி இரண்டு வாரங்களில் வெளியேறிய போட்டியாளர்களும், விஜய் டிவி பிரபலங்களும் உள்ளே நுழைவது வழக்கம். எனவே அதற்கான ஒரு மாற்றமாக கூட இது இருக்கலாம் என்று ரசிகர்கள் கருதுகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மாற்றம்... அறிவிப்பை வெளியிட்ட விஜய் டிவி... ஒருவேள அந்த TWIST இதுதானா..? வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

biggboss4tamil time changed announcement பிக்பாஸ் நிகழ்ச்சியில் புதிய மாற்றம்

People looking for online information on Biggboss4tamil, Vijay tv will find this news story useful.