நல்லவனா 'நடிக்குறது' தான் அவரோட ஸ்ட்ரேட்டஜி... என்ன பொசுக்குன்னு இப்படி?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டில் தற்போது போட்டியாளர்களின் எண்ணிக்கை 7 ஆக குறைந்துள்ளது. ஆரி, பாலாஜி, ஷிவானி, ரம்யா, சோம், ரியோ, கேப்ரியலா ஆகியோர் மட்டுமே தற்போது எஞ்சியுள்ளனர். இதனால் நாளைய நாமினேஷனில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இன்னும் இரு வாரங்களே இறுதிப்போட்டிக்கு இருப்பதால் போட்டியாளர்களின் மத்தியில் சிலபல சண்டைகளும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

Gabriella talks about Balaji Murugadoss's Strategy

இதற்கிடையில் நேற்று கமல் ஒரு டாஸ்க் ஒன்றை அளித்தார். அதாவது சக போட்டியாளர்களின் ஸ்ட்ராட்டஜி குறித்து வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்பது தான் அது. இதில் கேப்ரியலாவுக்கு, பாலாவின் புகைப்படம் வந்தது. அவர் பாலாஜி குறித்து, ''அவர் தன்னை கெட்டவனா காட்டிட்டு இப்போ நல்லவனா மாறின மாதிரி இருக்கு. அதே மாதிரி தன்கூட இருக்கவங்கள பாதுகாப்பா பாத்துக்குறாரு. அவங்கள நாமினேஷன் பண்றது கெடையாது,'' என சொன்னார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் என்னமா இப்படி பொசுக்குன்னு உண்மையை சொல்லிட்ட. நாளைக்கு சார் உன்ன நாமினேஷன் பண்ணுவாரு பார்த்துக்க என கருத்து தெரிவித்து இருக்கின்றனர். பாலாஜி, கேபியை நாமினேட் செய்வாரா? என்பதை காத்திருந்து பார்க்கலாம்.

தொடர்புடைய இணைப்புகள்

Gabriella talks about Balaji Murugadoss's Strategy

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.