'இவங்க தான் பிக்பாஸ் டைட்டில் ஜெயிப்பாங்க'... விஜய் டிவி பிரபலம் வெளியிட்ட பதிவு..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று 85 வது நாளை கடந்து வெற்றிகரமாக இறுதிப் பயணத்தை போட்டியாளர்கள் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் ஒவ்வொரு சீசனிலும் இறுதியாக நடைபெறும் Freeze டாஸ்க்கிற்காக ரசிகர்கள் காத்திருப்பது வழக்கம். அந்த வகையில் இந்த வாரம் இந்த சீசனுக்கான Freeze டாஸ்க் நடைபெற்றது. அதேபோல் பாலாஜி மற்றும் ஆரி இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. ரம்யாவிற்கும் ஆரிக்கும் இடையே கூட கருத்து வேறுபாடுகள் அதிகரித்தது. இந்நிலையில் பாச மழைக்கு நிகராக வன்முறைகள் நிறைந்த வாரமாக இந்த வாரம் இருந்தது என்றே சொல்லலாம்.

this contestant will be the winner says vijay tv celebrity விஜய் டிவி பிரபலம் வெளியிட்ட பதிவு

நேர்மையானவராகவும், கடின உழைப்பாளியாகவும், புத்திசாலியாகவும் இருப்பதினால் ஆரி பலரது அபிமானத்தைப் பெற்றிருக்கிறார் என்றே சொல்லலாம். பலரும் அவருக்கு ஆதரவாக கடந்த வாரத்தில் பதிவிட்டு வந்ததையும் காணமுடிகிறது. இந்நிலையில் பிரபல நடிகை மற்றும் விஜய் டிவி பிரபலமான ரேஷ்மா ஒரு பதிவிட்டுள்ளார். அவர் கூறும்போது "என்னுடைய ஆதரவு அரிக்குதான். அவர்தான் இந்த முறை டைட்டில் ஜெயிப்பார். இது என்னுடைய கணிப்பு" என்று கூறியுள்ளார். இந்தப் பதிவுக்கு ரசிகர்கள் பலரும் பேராதரவு தந்ததுடன் அவர் கூறியதை வழிமொழிந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

'இவங்க தான் பிக்பாஸ் டைட்டில் ஜெயிப்பாங்க'... விஜய் டிவி பிரபலம் வெளியிட்ட பதிவு..! வீடியோ

Tags : Aari

தொடர்புடைய இணைப்புகள்

this contestant will be the winner says vijay tv celebrity விஜய் டிவி பிரபலம் வெளியிட்ட பதிவு

People looking for online information on Aari will find this news story useful.