www.garudabazaar.com

அட பாவக் கதைகள் நரிக்குட்டி... இந்த விஜய் டிவி பிரபல நிகழ்ச்சியில் பங்கேற்றவரா?.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களான கௌதம் மேனன், சுதா கொங்கரா, வெற்றி மாறன், விக்னேஷ் சிவன் ஆகியோர் காதல், அந்தஸ்து, கௌரவம் என்கிற கருவை மையமாக வைத்து "பாவ கதைகள்" என்ற ஆந்தாலஜி திரைப்படத்தை இயக்கியுள்ளனர். இந்த படம்  Netflix தளத்தில் வெளியிட்டுள்ளனர். மொத்தமாக பார்க்கும்போது, ஜாதிப் பெருமை, குடும்ப கௌரவம் ஆகியவற்றால் ஏற்படும் தீவினைகள் குறித்து விமர்சிக்கக்கூடிய படங்களாகவே இருக்கின்றன.

is paava kadhaigal narikutty is this vijay tv person பாவ கதைகள் நரிக்குட்டி

இதில் இயக்குனர் விக்னேஷ் சிவன்  லவ் பண்ண உட்றனும் என்ற தலைப்பில் ஒரு பகுதியை இயக்கி இருந்தார். இந்த கதையில் நரிக்குட்டி என்ற கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதிலும் ‘ESPN’னா என்று கேட்கும் காட்சிகளில் ரசிகர்களை சிரிக்க வைக்கின்றன. இவர் பலருக்கும் அறிமுகம் ஆனவர் தான். இவர் வேறு யாரும் இல்லை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவா 2 வில் போட்டியாளராக கலந்து கொண்டு இறுதி போட்டி வரை வந்த ஜாபர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. தாடி மீசையெல்லாம் வளர்த்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

is paava kadhaigal narikutty is this vijay tv person பாவ கதைகள் நரிக்குட்டி

People looking for online information on Paava Kadhaigal will find this news story useful.