www.garudabazaar.com
iTechUS

GP முத்துக்கு பிக்பாஸ் கொடுத்த FUN வார்னிங்.. தலைவரு அரண்டு போய்ட்டாரு😂..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Biggboss Gives Fun Warning To GP Muthu for sleeping

Also Read | "ரம்பா மாதிரியே இருக்கீங்க😊".. இளம் போட்டியாளரிடம் சொன்ன விக்ரமன்.! bigg boss

இந்த போட்டி சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், சமீபத்தில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார். மேலும், கடந்த வாரம் நடந்த Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி உள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த வார இறுதியில் தோன்றி இருந்த கமல்ஹாசன், கடந்த வாரம் போட்டியாளர்களின் செயல்பாடு குறித்தும் நிறைய விஷயங்களையும் பேசி இருந்தார்.

Biggboss Gives Fun Warning To GP Muthu for sleeping

இந்நிலையில், ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அசல் கோலார், GP முத்து, மெட்டி ஒலி சாந்தி, ராபர்ட் மாஸ்டர், தனலட்சுமி, மணிகண்ட ராஜேஷ், குயின்சி மற்றும் நிவாஷினி ஆகியோர் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளனர். உள்ளே வந்த உடனேயே அசல் - ADK இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், பின்னர் ஷிவின் விக்ரமனிடம் பேசிய விதம் பற்றியும் அசல் விமர்சித்திருந்தார். அசல் தன்னிடம் பேச பிடிக்கவில்லை என சொல்லியதை கேட்டு கண்கலங்கிய ADK வை சக போட்டியாளர்கள் சமாதானம் செய்தனர்.

Biggboss Gives Fun Warning To GP Muthu for sleeping

இதனிடையே, இந்த வாரம் Sacrifice டாஸ்க் ஒன்று நடைபெறுகிறது. அதாவது பிக் பாஸ் செய்யும் விஷயத்தை அனைவரும் கண்டிப்பாக செய்ய வேண்டும் என்பது தான் அது. உதாரணத்திற்கு லுங்கி மாற்றம் பனியன் அணிந்தபடி இருக்க வேண்டும் என்றும், தலை சீவாமல் இருக்க வேண்டும் என்றும் அசீமிடம் பிக் பாஸ் கூறி இருந்தார். இதனால் லுங்கி மற்றும் பனியன் காஸ்டியூம் உடன் வீட்டுக்குள் இருக்கிறார். இந்நிலையில், அமுதவாணனுக்கு ஹேர் ஸ்டைலை மாற்றும்படி சொல்லியிருக்கிறார் பிக்பாஸ். இப்படி அடுத்தடுத்து சுவாரஸ்ய சம்பவங்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் நடைபெற்று வருகின்றன.

இந்த சூழ்நிலையில் ஷெரினா மற்றும் ராம் ஆகியோர் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்திருக்கின்றனர். இதனிடையே, GP முத்து தனது படுக்கையில் தூங்கிக்கொண்டிருக்க திடீரென்று நாய் குரைக்கும் சத்தம் கேட்கிறது. இதனால் அவர் திடுக்கிட்டு எழுந்துகொள்கிறார். அப்போது அங்கு வரும் ஷிவின், என்ன ஆச்சு என கேட்கிறார். அதற்கு தூக்கம் வந்துச்சு என முத்து சொல்ல, "உடம்பு சரியில்லைன்னு நெனச்சா தூக்கம் வந்துச்சா? அப்போ நாய் குரைச்சதுல தப்பே இல்ல. வெளியே வாங்க" என கிண்டலாக சொல்கிறார் ஷிவின்.

Biggboss Gives Fun Warning To GP Muthu for sleeping

அப்போது பேசும் பிக்பாஸ், "என்ன முத்து தூக்கமா? இப்படியே தூங்கிட்டு இருந்தா நீங்க போகவேண்டாம். நானே அனுப்பிடுவேன்" என்கிறார். இதைக்கேட்டு ஷாக் ஆன முத்து "இல்ல இல்ல இனி தூங்கமாட்டேன்" என்கிறார். இதனிடையே ஷிவின் கேமரா முன்பு 'டேர்' செய்யும்படி முத்துவிடம் சொல்கிறார். அப்போது பாபா முத்திரை போல, கையை கேமரா முன்னிலையில் காட்டுமாறு ஷிவின் சொல்ல முத்துவும் அப்படியே செய்கிறார்.

அதன்பின்னர் ஷிவின்,"டேர்-னா முடிஞ்சா என்ன தூக்கிப் பாருன்னு அர்த்தம்" என சிரித்தபடி சொல்கிறார். இதனால் பதறிப்போகும் முத்து,"பிக்பாஸ் சாரி. எனக்கு தெரியாது அப்படின்னா என்னன்னு. இனி நான் தூங்கமாட்டேன்" என கேமரா முன்பு சொல்கிறார்.

Also Read | "யாரு சாமி நீங்க".. விக்ரமனை மனசார பாராட்டிய நிவாஷினி.. ராபர்ட் சொன்னதுதான் அல்டிமேட்..!

தொடர்புடைய இணைப்புகள்

Biggboss Gives Fun Warning To GP Muthu for sleeping

People looking for online information on Bigg Boss Tamil 6, Biggboss, GP MUTHU, Vijay tv will find this news story useful.