www.garudabazaar.com
iTechUS

"கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்க".. பிக்பாஸ்-கிட்ட அசீம் வச்ச கோரிக்கை.. Task-ல் வந்த Twist..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Azeem Request to Biggboss to change his Costume in House

Also Read | பிக் பாஸ் வீட்டிற்குள் Surprise என்ட்ரி கொடுத்த தனா.. அவங்க கையில் இருந்த டாட்டூவ கவனிச்சீங்களா!!

இந்த போட்டி சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், சமீபத்தில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார். மேலும், கடந்த வாரம் நடந்த Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி உள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த வார இறுதியில் தோன்றி இருந்த கமல்ஹாசன், கடந்த வாரம் போட்டியாளர்களின் செயல்பாடு குறித்தும் நிறைய விஷயங்களையும் பேசி இருந்தார்.

இந்நிலையில், ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அசல் கோலார், GP முத்து, மெட்டி ஒலி சாந்தி, ராபர்ட் மாஸ்டர் ஆகியோர் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளனர். உள்ளே வந்த உடனேயே அசல் - ADK இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், பின்னர் ஷிவின் விக்ரமனிடம் பேசிய விதம் பற்றியும் அசல் விமர்சித்திருந்தார். அசல் தன்னிடம் பேச பிடிக்கவில்லை என சொல்லியதை கேட்டு கண்கலங்கிய ADK வை சக போட்டியாளர்கள் சமாதானம் செய்தனர்.

Azeem Request to Biggboss to change his Costume in House

இதனிடையே, Sacrifice டாஸ்க் ஒன்று நடைபெறுகிறது. அதாவது பிக் பாஸ் செய்யும் விஷயத்தை அனைவரும் கண்டிப்பாக செய்ய வேண்டும் என்பது தான் அது. உதாரணத்திற்கு லுங்கி மாற்றம் பனியன் அணிந்தபடி இருக்க வேண்டும் என்றும், தலை சீவாமல் இருக்க வேண்டும் என்றும் அசிமிடம் பிக் பாஸ் கூறி இருந்தார். இதனால் லுங்கி மற்றும் பனியன் காஸ்டியூம் உடன் வீட்டுக்குள் இருக்கிறார். இந்நிலையில், தனது உடையை மாற்றும்படி பிக்பாஸ்-க்கு கோரிக்கை வைத்திருக்கிறார் அசீம்.

Azeem Request to Biggboss to change his Costume in House

பிக்பாஸிடம் இதுகுறித்து பேசும் அசீம்,"கதிருக்கு எல்லாம் ஷூ-வை பெயிண்ட்ல முக்க சொல்லிடீங்க. நீங்க சொல்லுங்க. என்கிட்ட இருக்க எல்லா ஷூவையும் முக்கிடறேன். ஆனா இது ரொம்ப வித்தியாசமா இருக்கு பிக்பாஸ். ப்ளீஸ் கொஞ்சம் பெரிய மனசு பண்ணி பழையபடி பண்ண சொல்லுங்க பிக்பாஸ். இன்னும் ஒருவாரம் தான் இருக்கு. நீங்க எந்த sacrifice டாஸ்க் குடுத்தாலும் நான் பண்ணுவேன். அது உங்களுக்கே தெரியும். இந்த காஸ்டியூம் ரொம்ப ஒரு மாதிரி இருக்கு. பழைய காஸ்டியூம் கொடுக்க சொல்லுங்க பிக்பாஸ். இன்னைக்கு முழுவதும் இந்த ட்ரெஸ் போடுறேன். நாளைக்கு பழைய காஸ்டியூம் கொடுக்க சொல்லுங்க பிக்பாஸ். இது என்னோட ரெக்வஸ்ட்" என்கிறார்.

Also Read | GP முத்துவுக்கு ஷாக் கொடுத்த அசீம் & மைனா.. தலைவர் கொடுத்த கமெண்ட் 😅

தொடர்புடைய இணைப்புகள்

Azeem Request to Biggboss to change his Costume in House

People looking for online information on Azeem, Bigg boss, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Vijay Television, Vijay tv will find this news story useful.