www.garudabazaar.com
iTechUS

"ரம்பா மாதிரியே இருக்கீங்க😊".. இளம் போட்டியாளரிடம் சொன்ன விக்ரமன்.! bigg boss

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Vikraman says Queency looks like actress Rambha

Also Read | சும்மாவா அவரை வாத்தி-ன்னு சொல்றாங்க.. ADK-க்கு விக்ரமன் கொடுத்த Life அட்வைஸ்.!

இந்த போட்டி சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், சமீபத்தில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார். மேலும், கடந்த வாரம் நடந்த Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி உள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த வார இறுதியில் தோன்றி இருந்த கமல்ஹாசன், கடந்த வாரம் போட்டியாளர்களின் செயல்பாடு குறித்தும் நிறைய விஷயங்களையும் பேசி இருந்தார்.

Vikraman says Queency looks like actress Rambha

இதனிடையே, இந்த வாரம் Sacrifice டாஸ்க் ஒன்று நடைபெறுகிறது. அதாவது பிக் பாஸ் செய்யும் விஷயத்தை அனைவரும் கண்டிப்பாக செய்ய வேண்டும் என்பது தான் அது. உதாரணத்திற்கு லுங்கி மாற்றம் பனியன் அணிந்தபடி இருக்க வேண்டும் என்றும், தலை சீவாமல் இருக்க வேண்டும் என்றும் அசீமிடம் பிக் பாஸ் கூறி இருந்தார். இதனால் லுங்கி மற்றும் பனியன் காஸ்டியூம் உடன் வீட்டுக்குள் இருக்கிறார். இந்நிலையில், அமுதவாணனுக்கு ஹேர் ஸ்டைலை மாற்றும்படி சொல்லியிருக்கிறார் பிக்பாஸ். இப்படி அடுத்தடுத்து சுவாரஸ்ய சம்பவங்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் நடைபெற்று வருகின்றன.

Vikraman says Queency looks like actress Rambha

இந்நிலையில், ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அசல் கோலார், GP முத்து, மெட்டி ஒலி சாந்தி, ராபர்ட் மாஸ்டர், தனலட்சுமி, மணிகண்ட ராஜேஷ், குயின்சி மற்றும் நிவாஷினி ஆகியோர் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளனர். உள்ளே வந்த உடனேயே அசல் - ADK இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், பின்னர் ஷிவின் விக்ரமனிடம் பேசிய விதம் பற்றியும் அசல் விமர்சித்திருந்தார். அசல் தன்னிடம் பேச பிடிக்கவில்லை என சொல்லியதை கேட்டு கண்கலங்கிய ADK வை சக போட்டியாளர்கள் சமாதானம் செய்தனர்.

Vikraman says Queency looks like actress Rambha

இந்த சூழ்நிலையில், வீட்டுக்குள் வந்திருக்கும் குயின்சி விக்ரமனிடம் பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது, அமுதவாணனும் அங்கே வருகிறார். குயின்சியிடம் பேசும் விக்ரமன்,"உங்களுக்கு Tea போட்டுட்டு இருக்கேன். வெல்கம் ட்ரிங்க் இதுதான்" என்கிறார். அப்போது நன்றி சொல்லும் குயின்சி அருகில் இருந்த அமுதவாணனின் புதிய ஹேர் ஸ்டைல் குறித்து கலாய்க்கிறார். இதனிடையே, அமுது,"வெளியே ad ஷூட்டிங்-லாம் நல்லா போகுதா?" எனக் கேட்க எல்லாம் நன்றாக செல்வதாக பதில் அளிக்கிறார் குயின்சி.

இதனிடையே "ரம்பா மாதிரியே இருக்கீங்க" என குயின்சியிடம் சொல்கிறார் விக்ரமன். அதற்கு "அப்படியா?" என ஆச்சர்யத்துடன் குயின்சி கேட்கிறார். தொடர்ந்து பேசிய குயின்சி வீட்டுக்குள் இருந்தபோது கைகளில் ஏற்பட்டிருந்த சிக்கல் வெளியே சென்றவுடன் சரியாகிவிட்டதாகவும் அதற்கு உணவு தான் காரணம் என தான் நினைப்பதாகவும் கூறுகின்றார். இதைக்கேட்டு அமுதுவும் விக்ரமனும் சூப்பர் என்கின்றனர்.

Also Read | விக்ரமன் & ஷிவின் கிட்ட நிவாஷினி சொன்ன விஷயம்.. விக்ரமனே சிரிச்சிட்டாரு..!

தொடர்புடைய இணைப்புகள்

Vikraman says Queency looks like actress Rambha

People looking for online information on Bigg Boss Tamil 6, Queency, Rambha, Vijay tv, Vikraman will find this news story useful.