www.garudabazaar.com

GP முத்துவுக்கு ஷாக் கொடுத்த அசீம் & மைனா.. தலைவர் கொடுத்த கமெண்ட் 😅

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

GP Muthu have to stay 35 days in BB House says Azeem

Also Read | "டா சொல்லாதடா.. தெரியாம வந்துச்சு வெங்காயம் வந்துச்னு".. அமுது & விக்ரமனிடம் கோபமடைந்த அசீம்!

இந்த போட்டி சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், சமீபத்தில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார். மேலும், கடந்த வாரம் நடந்த Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி உள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த வார இறுதியில் தோன்றி இருந்த கமல்ஹாசன், கடந்த வாரம் போட்டியாளர்களின் செயல்பாடு குறித்தும் நிறைய விஷயங்களையும் பேசி இருந்தார்.

GP Muthu have to stay 35 days in BB House says Azeem

இந்நிலையில், ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அசல் கோலார், GP முத்து, மெட்டி ஒலி சாந்தி, ராபர்ட் மாஸ்டர் ஆகியோர் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளனர். உள்ளே வந்த உடனேயே அசல் - ADK இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், பின்னர் ஷிவின் விக்ரமனிடம் பேசிய விதம் பற்றியும் அசல் விமர்சித்திருந்தார். அசல் தன்னிடம் பேச பிடிக்கவில்லை என சொல்லியதை கேட்டு கண்கலங்கிய ADK வை சக போட்டியாளர்கள் சமாதானம் செய்தனர்.

GP Muthu have to stay 35 days in BB House says Azeem

இந்த சூழ்நிலையில், GP முத்துவுக்கு புது ஷாக் ஒன்றை கொடுக்கிறார் அசீம். இருவரும் பெட்ரூம் பகுதிக்கு செல்ல, தன்னுடைய பெட் எது என முத்து கேட்கிறார். அப்போது, பல பெட்கள் காலியாக இருப்பதாகவும் எதை வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் சொல்கிறார் அசீம். தொடர்ந்து," நீங்க 35 நாள் உள்ள இருக்க போறதை பத்தி நானும் சொல்ல மாட்டேன். நீங்களும் தெரிஞ்ச மாதிரி காட்டிக்காதீங்க" என்கிறார்.

GP Muthu have to stay 35 days in BB House says Azeem

இதனை குழப்பத்துடன் பார்க்கும் முத்து,"35 நாள் எதுக்கு" என தனக்கே உரித்தான தொனியில் சொல்கிறார். அப்போது, அங்கு வரும் மைனாவும்,"இத முன்னாடியே சொன்னா நீ வரமாட்ட . அதுனால தான் சொல்லல" என்கிறார். இதனிடையே அசீம்," நீங்க உள்ள வந்த அப்போவே பிக்பாஸ் சொன்னாரு இல்ல. போக சொல்லும்போதுதான் போகணும்னு" எனச் சொல்லவே, GP முத்து இருவரையும் மாறி மாறி குழப்பத்துடன் பார்க்கிறார். ரீ- எண்ட்ரியாக உள்ளே வந்த GP முத்துவை கலாய்ப்பது வீட்டை மீண்டும் கலகலப்பாக்கியுள்ளது.

Also Read | "என் கூட இன்னொரு முறை துணிவு பாரு".. மனைவிக்கு ட்வீட் செய்த 'மங்காத்தா' தயாநிதி அழகிரி!

தொடர்புடைய இணைப்புகள்

GP Muthu have to stay 35 days in BB House says Azeem

People looking for online information on Azeem, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, GP MUTHU, Vijay Television, Vijay tv will find this news story useful.