www.garudabazaar.com
iTechUS

GP முத்துவின் ட்ரெண்டிங் காஸ்டியூம்.. பார்த்ததும் விக்ரமன் சொன்ன விஷயம்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Vikraman Comment on GP Muthu New Look in BB House

Also Read | அசீமை வச்சு Roast பண்ணிய தனா.. உடனே பிக்பாஸ் சொன்ன கமெண்ட் தான்.. மொத்த பேரும் சிரிச்சிட்டாங்க😂..!

இந்த போட்டி சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், சமீபத்தில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார். மேலும், கடந்த வாரம் நடந்த Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி உள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த வார இறுதியில் தோன்றி இருந்த கமல்ஹாசன், கடந்த வாரம் போட்டியாளர்களின் செயல்பாடு குறித்தும் நிறைய விஷயங்களையும் பேசி இருந்தார்.

Vikraman Comment on GP Muthu New Look in BB House

இந்நிலையில், ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அசல் கோலார், GP முத்து, மெட்டி ஒலி சாந்தி, ராபர்ட் மாஸ்டர், தனலட்சுமி மற்றும் மணிகண்ட ராஜேஷ் ஆகியோர் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளனர். உள்ளே வந்த உடனேயே அசல் - ADK இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், பின்னர் ஷிவின் விக்ரமனிடம் பேசிய விதம் பற்றியும் அசல் விமர்சித்திருந்தார். அசல் தன்னிடம் பேச பிடிக்கவில்லை என சொல்லியதை கேட்டு கண்கலங்கிய ADK வை சக போட்டியாளர்கள் சமாதானம் செய்தனர்.

Vikraman Comment on GP Muthu New Look in BB House

இதனிடையே, Sacrifice டாஸ்க் ஒன்று நடைபெறுகிறது. அதாவது பிக் பாஸ் செய்யும் விஷயத்தை அனைவரும் கண்டிப்பாக செய்ய வேண்டும் என்பது தான் அது. உதாரணத்திற்கு லுங்கி மாற்றம் பனியன் அணிந்தபடி இருக்க வேண்டும் என்றும், தலை சீவாமல் இருக்க வேண்டும் என்றும் அசீமிடம் பிக் பாஸ் கூறி இருந்தார். இதனால் லுங்கி மற்றும் பனியன் காஸ்டியூம் உடன் வீட்டுக்குள் இருக்கிறார். இந்நிலையில், அமுதவாணனுக்கு ஹேர் ஸ்டைலை மாற்றும்படி சொல்லியிருக்கிறார் பிக்பாஸ். இப்படி அடுத்தடுத்து சுவாரஸ்ய சம்பவங்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், வீட்டுக்குள் GP முத்து ஹூடி அணிந்து நின்றுகொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் விக்ரமன்,"அழகா இருக்கே ட்ரெஸ் " என்கிறார். அப்போது, முத்து,"நீங்க சொல்றத பாத்தா நல்லா இருக்க மாதிரி இல்லையே. ஏதோ கிண்டல் பண்ற மாதிரி இருக்கே" என்கிறார். தொடர்ந்து பேசும் விக்ரமன்,"இல்லங்க, நல்லா இருக்கு. DREW னு போட்ருக்கு" என்கிறார். அதைக்கேட்டதும்,"அப்டின்னா என்ன?" என முத்து கேட்கிறார்.

Vikraman Comment on GP Muthu New Look in BB House

அதற்கு "வரைஞ்சிருக்கு" என விக்ரமன் சொல்ல, "இத வச்சே உங்கள ட்ரோல் பண்ண போறாங்கன்னு அர்த்தம்" என அமுதவாணன் சொல்லியபடி முத்துவிடம் காபி கோப்பையை கொடுக்கிறார். அப்போது "கொதிக்குதா" என அமுது கேட்க, முத்து ஆமா என்கிறார். உடனே,"மூஞ்சில ஊத்திக்கோ" எனச் சொல்லிவிட்டு அங்கிருந்து சிரித்தபடி செல்கிறார். அவரை முத்து சிரித்தபடியே பார்க்க, "அமுதவாணா இதெல்லாம் தப்பு" என்கிறார் விக்ரமன்.

அப்போது," ஏய் எங்க அண்ணனை செல்லமா கலாய்ப்பேன்பா" என சிரித்தபடி முத்துவின் தோள்மீது கைபோட்டபடி அங்கிருந்து இருவரும் செல்கின்றனர்.

Also Read | அமுதுவின் புதிய ஹேர் ஸ்டைல்.. விக்ரமனால சிரிப்பை கண்ட்ரோல் பண்ண முடியல..!

தொடர்புடைய இணைப்புகள்

Vikraman Comment on GP Muthu New Look in BB House

People looking for online information on Amudhavanan, Bigg Boss 6, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, GP MUTHU, Vikraman will find this news story useful.