"கடவுளுக்கு இரக்கமே இல்லையா...அவர் டாக்டர் மட்டும் இல்ல..." - பிக் பாஸ் பிரபலம் கண்ணீர் பதிவு
முகப்பு > சினிமா செய்திகள்நடிகரும், மருத்துவருமான சேதுராமன் நேற்று மாரடைப்பு காரணமாக காலமானர். இவர் 2013-ஆம் ஆண்டு வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் ஹீரோவாக சந்தானம் உடன் நடித்திருந்தார். வாலிப ராஜா, 50/50 போன்ற சில படங்களிலும் நடித்திருக்கிறார். ஆனால் இவரை நடிகராய் தெரிந்த பலருக்கும் இவர் ஒரு புகழ்பெற்ற தோல் மருத்துவர். இவருக்கு திருமணமாகி குழந்தை இருக்கிறது.

இந்நிலையில் அவர் நேற்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இந்த செய்தி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாய் விழுந்தது. இந்நிலையில் இது பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த பிக் பாஸ் அபிராமி,"இது என் இதயத்தை நொறுக்குகிறது...கடவுளுக்கு இரக்கம் இல்லையா... வாழ்க்கை நிலையற்றதுனு தெரியும் ஆனாலும் இது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. அவர் ஒரு மருத்துவர் மட்டும் இல்லை. எனது நம்ப தகுந்த நண்பரும் கூட...உங்கள் ஆன்மா சாந்தி அடையட்டும் என் நண்பரே" என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.