''கவின் ஷூட்டிங்கில் இருக்காருனு சாண்டி சொன்னாரு'' - பிக்பாஸ் பிரபலம் விளக்கம்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Oct 23, 2019 05:31 PM
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடர் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றவர் கவின். பின்னர் 'நட்புனா என்னனு தெரியுமா' என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார்.

அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் காதல், நட்பு என அவரது நடவடிக்கைகளால் சமூக வலைதளங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டார். பின்னர் அவர் வெளியே வந்ததும் அவரை பற்றிய செய்திகள் அதிகம் பகிரப்பட்டது.
இந்நிலையில் கவின் திடீரென எந்த நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளமால் இருந்தார். அவரை பற்றிய செய்திகள் வெளிவராமல் இருந்தது. இதனையடுத்து ரசிகர் ஒருவர் நடிகையும் பிக்பாஸ் சீசன் 2 போட்டியாளருமான காஜல் பசுபதியிடம் கவின் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சாண்டி, கவின் தற்போது படப்பிடிப்பில் இருக்கிறார் என்று தெரிவித்ததாக கூறினார்.
Tags : Kavin, Sandy, Kaajal Pasupathi, Bigg Boss 3