இந்த சின்ன பையனா பிக்பாஸ்ல கமல் முன்னாடி கலக்குனது..?! யாருன்னு தெரியுதா பாருங்க.!
முகப்பு > சினிமா செய்திகள்பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு பிரபலமடைந்த நடிகர் தனது சிறுவயது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பிக்பாஸ் போட்டியில் பங்கேற்று பிரபலமடைந்தவர் ஆரவ். மேலும் இப்போட்டியில் டைட்டில் வின்னராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் விஜய் ஆண்டனி நடித்த சைத்தான் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தார். இதை தொடர்ந்து சரண் இயக்கிய மார்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் ஹீரோவாக அசத்தினார். மேலும் இவர் நடித்துள்ள ராஜபீமா படம் ரிலீஸுக்காக காத்திருக்கிறது.
இந்நிலையில் ஆரவ் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவரின் சிறுவயது புகைப்படத்தை பகிருமாறு ரசிகர் ஒரு கேட்க, ஆரவ் தனது இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும் பிக்பாஸ் வீட்டை மிஸ் செய்வதாகவும், அங்குதான் பொறுமையை கற்றுகொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Tags : Aarav, Market Raja MBBS, Rajabheema, BIGGBOSS TAMIL