தேங்க் யூ ஸ்வீட் ஹார்ட் - ஆரவுக்கு பதிலளித்த ஓவியா

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த வருடம் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஓவியாவும் ஆரவும் பங்கேற்றிருந்தனர். இந்நிகழ்ச்சியில் இருவருக்குள்ளும் காதல், பிரிவு என தமிழக அளவில் பரபரப்பாக பேசப்பட்டனர்.

Oviya thanks to Aarav for his wishes for 90ML movie

அதன் பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ஓவியா இருவரும் நல்ல நண்பர்கள் என்று தெரிவித்தார். இந்நிலையில் ஓவியா நடிப்பில் 90 ML திரைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ஆரவ்,  இது  உன் வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையான தருணம். இந்த படத்தின் உன்னுடைய கடின உழைப்பு மற்றும் அதனால் உருவான மன அழுத்தம் ஆகியவை பற்றி எனக்கு தெரியும். அது ஒரு போது வீணாகாது. 90 எம்.எல் வெற்றியடைய வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்த ஓவியா, மிக்க நன்றி ஸ்வீட் ஹார்ட், நீ சிறந்தவன் என்று பதிலளித்தார்.

Tags : Oviya, Aarav, Str, 90 ML