''இந்த விஷயத்துல நீங்க தான் எனக்கு Inspiration'' - ஆர்யா குறித்து Bigg Boss ஆரவ்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jul 21, 2019 01:32 PM
'அயன்', 'மாற்றான்' படங்களுக்கு பிறகு சூர்யா - கே.வி.ஆனந்த் இணைந்திருக்கும் படம் 'காப்பான்'. இந்த படத்தை லைக்கா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

இந்த படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இந்த படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சூர்யாவின் பிறந்நாளை முன்னிட்டு இன்று ( ஜூலை 21) நடைபெறவுள்ளது. விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளவிருக்கிறார்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு ஆர்யா கலந்துகொள்ள சைக்கிளில் 360 கி.மீ பயணித்து வந்ததாக தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள ஆரவ், நீங்கள் இது போன்ற தொடர்ந்து செய்வது மகிழ்ச்சியாக இருக்கிறது சகோதரா. இந்த விஷயத்தில் நீங்க தான் எனக்கு இன்ஸ்பிரேஷன். இது தான் வாழ்க்கை என்பது. தொடர்ந்து எங்களுக்கு தூண்டுகோலாக இருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
So good to see that you are doing it regularly brother..you are such an inspiration..this is wat living Life is..Keep inspiring🤗🤗
— Arav (@Nafeez_Arav) July 21, 2019