பெரிய படத்தில் ஒப்பந்தமான பிரபல ஹீரோ - சம்பளத்தில் 3 கோடி நிதியளித்த நெகிழ்ச்சி சம்பவம்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் லாரன்ஸ் கொரோனா வைரஸ் நிவாரணமாக செய்த நிதியுதவி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் நிவாரணம் - 3 கோடி கொடுத்த ஹீரோ | actor raghava lawrence donates 3 crores for corona relief fund

உலகம் முழுவதும் கொரோனா நோயின் அச்சுறுத்தலால் முடங்கி போய் இருக்கிறது. நாளுக்கு நாள் பயம் அதிகரித்து கொண்டே போகிறது. மக்கள் அனைவரும் வீட்டிற்குள் அடங்கி இருக்கின்றனர். பிரதமர் மோடி, 21 நாட்கள் 144 தடை சட்டம் விதித்து உத்தரவிட்டார். மேலும் தமிழகத்தில் போதுமான மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திரைப்படத்துறையை சேர்ந்த பலரும் தங்களால் முடிந்த பண உதவியை நிவாரண நிதிக்கு அளித்து வருகின்றனர். 

இதனிடையே நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் அளித்துள்ள உதவி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் சந்திரமுகி-2 படத்தில் ஒப்பந்தமாகியுள்ள அவர், அதற்கான அட்வான்ஸ் தொகையில் 3 கோடியை நிவாரண நிதிக்கு கொடுத்துள்ளார்.  'பிரதமர் மற்றும் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கும், ஃபெஃப்சி யூனியனுக்கும் அவர் முறையே 50 லட்சம் நிதியாக அளித்துள்ளார். மேலும் டான்சர் யூனியனுக்கு 50 லட்சமும், மாற்றுத்திறனாளிகளுக்கு 25 லட்சமும், ராயபுரம் தேசிய நகர் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு 75 லட்சமும் நிதியுதவி அளித்துள்ளார்.' லாரன்ஸின் இத்தகைய உதவி பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

Entertainment sub editor