பிக்பாஸ் நடிகர் பகிர்ந்த ஃபோட்டோ - என்ன இப்படி மாறிட்டாரு?! - ஊரடங்கு எஃபெக்ட்டாம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆரவ், ஓவியாவுடன் காதல் உள்ளிட்ட விஷயங்களால் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார்.

Bigg Boss season 1 fame Actor Aarav shares his transformation Photo on instagram | பிக்பாஸ் பிரபலம் நடிகர் ஆரவ் பகிர்ந்த டிரான்ஸ்ஃபர்மேசன் ஃபோ

விளம்பர மாடலான ஆரவ், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன் இயக்குநர் மணிரத்னத்தின் 'ஓகே கண்மணி', விஜய் ஆண்டனியுடன் 'சைத்தான்' உள்ளிட்ட படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அவர், சரண் இயக்கத்தில் 'மார்கெட் ராஜா எம்பிபிஎஸ்', 'ராஜ பீமா' உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.

இதில் மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் கடந்த வருடம் வெளியானது. இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது புகைப்படம் பகிர்ந்து ,  கண்ணாடியை பாருங்கள், அது தான் உங்கள் போட்டியாளர். குவாரண்டின் எஃபெக்ட் என்று குறிப்பிட்டுள்ளார்.

Entertainment sub editor