Fakir Other Banner USA

பிக் பாஸ் ஹீரோவின் படத்தில் பாகுபலி ஸ்டார்.. அதுவும் இப்படி ஒரு வேடமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரம்மாண்ட இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ‘பாகுபலி’ திரைப்படத்தின் முதல் பாகத்தில் நடித்தவர் பிரபாகரன். அதில் காலகேய மன்னனாக நடித்திருந்த பிரபாகருக்கு ஏராளமான பாராட்டுக்கள் குவிந்தன.

Baahubali Prabhakar plays an Agori in Bigg boss Aarav's Market Raja MBBS

இந்நிலையில், இயக்குநர் சரண் இயக்கத்தில் பிக் பாஸ் முதல் சீசன் வின்னர் ஆரவ் ஹீரோவாக நடித்து வரும் ‘மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்’ திரைப்படத்தில் பாகுபலி பிரபாகர் பிரபாகர் அகோரி வேடத்தில் நடிக்கிறார்.

சமீபத்தில் இப்படத்தில் ஆரவ்- பாகுபலி பிரபாகர் இடையே வரும் மிகப்பெரிய ஆக்ஷன் காட்சி விஜிபி-யில் படமாக்கப்பட்டது. இப்படத்திற்கு ‘ராட்சசன்’ படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் விக்கி இந்த படத்திற்கு ஸ்டண்ட் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

இப்படத்தில் ஆரவ்-க்கு ஜோடியாக தெலுங்கு நடிகை காவ்யா நடிக்கிறார். மேலும், ராதிகா சரத்குமார், நாசர், ரோகினி, சாயாஜி ஷிண்டே, யோகிபாபு, சாம்ஸ், தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சுரபி ஃபிலிம்ஸ் எஸ்.மோகன் தயாரிக்கும் ‘மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்’ படத்திற்கு சைமன் கே.சிங் இசையமைக்கிறார். கே.வி.குகன் ஒளிப்பதிவு செய்கிறார்.