www.garudabazaar.com

"உடைய மாத்துறதா இருந்தா இப்போ மாத்திக்கங்க".. பிக்பாஸ் சொன்னதும் ஒரு செகண்ட் ஷாக் ஆன ஷிவின்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன், ஒளிபரப்பாகி வருகிறது.

BiggBoss asked shivin to change her outfit before the task

Also Read | 'வாரிசு' டிரெய்லர் & 'துணிவு' டிரெய்லர்.. எது பிடிச்சிருந்தது?.. நடிகர் மேத்யூ வர்கீஸ் செம பதில்!

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்ட ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

BiggBoss asked shivin to change her outfit before the task

இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலேயே வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். பின்னர் அசல், ஷெரீனா, மகேஷ்வரி ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இதனையடுத்து, நிவாஷினி, ராபர்ட், குயின்சி, ராம் மற்றும் ஜனனி, தனலெட்சுமி ஆகியோர் வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். கடந்த வாரம் மணிகண்ட ராஜேஷ் வெளியேறினார்.

தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் அசிம், விக்ரமன், மைனா, அமுதவாணன், ஷிவின், ஏடிகே, கதிரவன், ரச்சிதா உள்ளிட்ட 8 போட்டியாளர்கள் உள்ளே இருக்கின்றனர். 80 நாட்களை கடந்துள்ள நிலையில் இனி வரும் நாட்கள் மிக முக்கியமானவை என்பதால், அனைத்து போட்டியாளர்களும் இறுதி சுற்று வரை முன்னேற டாஸ்க்கில் சிறந்து விளங்க வேண்டும் என்ற கட்டாயத்திலும் உள்ளனர். இதனால், வரும் நாட்கள் விறுவிறுப்பு நிறைந்தவையாக இருக்கும் என்றும் பிக்பாஸ் பார்வையாளர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

இனி வரும் நாட்களில் இறுதி சுற்று வரை முன்னேற அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி ஆக வேண்டும் என்ற நிலையும் உள்ளது.

அடுத்தடுத்து எந்தெந்த போட்டியாளர்கள் இறுதி சுற்றுக்கு முன்னேறி செல்வார்கள் என்பதை அறியவும் பார்வையாளர்கள் ஆவலாக உள்ளனர்.

BiggBoss asked shivin to change her outfit before the task

இதற்கு மத்தியில், அனைத்து போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் எதிர்பார்த்த Ticket To Finale சுற்று தற்போது நடைபெற்றிருந்தது. நிறைய கடினமான போட்டிகள் இந்த சுற்றில் அரங்கேறி இருந்த நிலையில், அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி இருந்தார்கள்.

மிதிவண்டி டாஸ்க், பிரெட் டாஸ்க், Debate டாஸ்க் உள்ளிட்ட பல டாஸ்க்குகள் ஒவ்வொரு நிமிடமும் விறுவிறுப்பாகவும் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை அறிந்து கொள்ள கடைசி வரை காத்திருக்க வேண்டிய சூழலும் இருந்தது. இப்படியாக தற்போது Ticket To Finale டாஸ்க்கும் ஏறக்குறைய இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் பெட்ரூமில் அமர்ந்து ஷிவின் நக பாலிஷ் போட்டுக் கொண்டு இருந்தார். அப்போது, திடிரென பேசிய பிக்பாஸ், உரத்த குரலில் "ஷிவின், உடையை மாத்துறதா இருந்தா இப்போ மாத்திக்கங்க" என கூறினார். திடிரென பிக்பாஸ் ஷிவின் என அழைத்ததும் சில நொடிகள் ஷிவின் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் சுதாரித்துக் கொண்டு, "நான்... ஓகே பிக்பாஸ். பேன்ட் போடனுமா? எந்த டாஸ்க்னு பாத்துட்டு உடை மாத்தலாம்னு நினைச்சேன் " என பதில் அளித்தார்.

Also Read | "பொங்கலுக்கு வாரிசு படத்தில் இதை எல்லாம் எதிர்பார்க்கலாம்".. நடிகர் மேத்யூ வர்கீஸ் EXCLUSIVE!

தொடர்புடைய இணைப்புகள்

BiggBoss asked shivin to change her outfit before the task

People looking for online information on Bigg Boss 6, Bigg boss 6 tami, Bigg Boss Tamil, Shivin will find this news story useful.