"உன் கேள்விக்கு பதிலே சொல்ல முடியாது".. அசிம் போல மாறி ஆவேசமா பேசிய ஷிவின்.. கமல் கொடுத்த Thug Life!!
முகப்பு > சினிமா செய்திகள்ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6 ஆவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. சுமார் 80 நாட்களை பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏறக்குறைய இறுதிக் கட்டத்தை தற்போது எட்டி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
Also Read | தளபதி விஜய்-யுடன் பிரபல நடிகர்.. வாரிசு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் BTS.. சூப்பர் ஃபோட்டோ!
அப்படி ஒரு சூழலில், இனி வரும் நாட்களில் இறுதி சுற்று வரை முன்னேற அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி ஆக வேண்டும் என்ற நிலையும் உள்ளது.
இதனிடையே, வார இறுதியில் தோன்றிய கமல்ஹாசன், போட்டியாளர்களுடன் நிறைய விஷயங்களை உரையாடி இருந்தார். இதனைத் தொடர்ந்து, மணிகண்டா ராஜேஷ் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார். அசிம், மைனா நந்தினி உள்ளிட்ட போட்டியாளர்கள் கண் கலங்கியும் போன நிலையில், அவரை வாழ்த்தி அனுப்பி இருந்தனர்.
அதே போல, பிக் பாஸ் வீட்டில் சக போட்டியாளர்களாக மாற வேண்டும் என கமல்ஹாசன் முன்னிலையில் டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. உதாரணத்திற்கு ஷிவின் போல மணிகண்டா மாற, ஷிவினிடம் கேட்கப்படும் கேள்விகள் மணிகண்டாவிடம் கேட்கப்படும். அந்த கேள்விகளுக்கு ஷிவினாக தன்னை கருதி மணிகண்டா பதில் சொல்ல வேண்டும். இப்படி அனைத்து போட்டியாளர்களும் செயல்பட்டிருந்தனர். அப்போது, அசிமாக ஷிவின் மாறி இருந்தார்.
இதனையடுத்து அசிமிடம் கேட்க வேண்டும் என நினைத்த கேள்விகளை ஷிவினிடம் போட்டியாளர்கள் முன் வைத்திருந்தனர். அப்போது கேள்வியை முன்வைக்கும் அமுதவாணன், "அசிம், நீங்க எப்பவுமே ஒருத்தர் கிட்ட சண்டை போடுறீங்க. அப்புறமா நைட் அவங்க கிட்ட போய் மன்னிப்பு கேக்குறீங்க. மறுபடியும் அடுத்தடுத்த வாரம் அதையே பண்ணிட்டு இருக்கீங்க. இது உங்க Strategy ஆ?, இல்ல உங்க கேரக்டரே இப்படித்தானா?" என கேட்டார்.
இதற்கு அசிமாக மாறி பதிலளித்த ஷிவின், "ஒரு தடவை சண்டை நடந்தா ஒரு தடவை பேசி தான் ஆகணும். அது தான் மனித இயல்பு" என கூறியதும், "வியாழக்கிழமை வரைக்கும் கோபமா இருக்கீங்க ஆனா வெள்ளிக்கிழமை வந்தால் சரி ஆகுறீங்க" என அடுத்த கேள்வியை அமுதவாணன் முன் வைத்ததும் அசிம் போல பேசும் ஷிவின், "வியாழக்கிழமை வெள்ளிக்கிழமை எல்லாம் நீ பேசாத. அதெல்லாம் நீ எதுக்கு பேசுற?. நான் என்ன பண்றேனோ அத மட்டும் பேசு சரியா?. இத வேற யாருகிட்டயாவது வெச்சுக்கோ. என்கிட்ட வச்சுக்காத சரியா" என அசிம் போலவே ஆவேசமாக பேசுகிறார்.
அப்போது அடுத்த கேள்வியை போட்டியாளர் யாரும் கேட்காமல் இருக்கும் சூழலில் பேசும் கமல்ஹாசன், "வீட்டார் ஏதாவது கேள்வி கேக்க போறீங்களா. இல்ல அப்படியே ஒதுங்கிடப் போறீங்களா, கேளுங்க அடுத்த கேள்விய" என ஜாலியாக தெரிவிக்கிறார்.
அந்த சமயத்தில் கதிரவன் கேள்வியை கேட்க முற்பட உடனடியாக பேசும் ஷிவின், "உன் கேள்விக்கெல்லாம் என்னால பதிலே அளிக்க முடியாது, கிளம்பு கிளம்பு. நீ வரவே வராத உன் கேள்விக்கெல்லாம் பதிலே வராது என்கிட்ட இருந்து" என கூறுகிறார். இதனைத் தொடர்ந்து தனது கேள்வியை முன் வைக்கும் கதிரவன், ஒரே விஷயத்தை 4,5 முறை வரை திரும்ப திரும்ப கூறுவதாகவும், ஒரு தடவை தெரிவிக்கும் போதே புரியும் விஷயத்தை ஏன் மீண்டும் மீண்டும் கூறி கொண்டே இருக்கிறீர்கள் என்றும் கேட்கிறார்.
இதற்கு பதில் சொல்லும் ஷிவின், "உனக்கு மட்டும் புரியறதுக்காக நான் இங்க பேசல. சரியா எல்லாருக்கும் புரியணும் தான் பேசுறேன். இதெல்லாம் ஒரு கேள்வின்னு என்கிட்ட வந்து கேட்காதே. இங்க இருக்குற எட்டு பேருக்கும் பேசணும். வெளியே பாக்குறவங்களுக்கு பேசணும். கமல் சாருக்கு பேசணும். 64 கேமராக்கு பேசணும். அதனால் தான் நான் பதிவு பண்ணிட்டு இருக்கேன்" என கூறுகிறார். அசிமாக மாறி அவரே போலவே ஷிவின் பேசி இருந்த விஷயங்கள், பலரையும் வெகுவாக கவர்ந்திருந்தது.
Also Read | "மனசுல எதையும் வெச்சுக்காதீங்க, Finale வாங்க".. Eliminate ஆனதும் விக்ரமன் கிட்ட மணி சொன்ன வார்த்தை
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Contestants Asking Questions To Kamal Haasan In Biggboss
- Kamal Haasan Says He Is Proud About Vikraman Father Talking
- ADK Acts Like Kathiravan Kamal Haasan Laughs Loud
- Kamal Haasan Surprise Gift To Azeem In BiggBoss 6 Tamil
- Shivin In Tears After No One In Her Family Visited BB House
- Azeem And Amudhavanan Argument Over Janany Elimination
- Shivin And Amudhu Throw Pillow To Vikraman During Sleeping
- Myna Nandhini Say Vikraman In Finals Azeem Questions
- Azeem Speak Bigil Vijay Dialogue About Bigg Boss Finale
- Azeem Questions About How Vikraman Enter Finale To Adk
- Kathiravan Mother About Shivin And Appreciate Her
- Shivin Explanation To Vikraman Request To Amudhvaanan Bigg Boss 6
தொடர்புடைய இணைப்புகள்
- 🔴LIVE: அட இவரா Evict-ஆக போறது 😱தோலுரிக்கும் Fatman Review
- "LOVE Failure ஆகிடுச்சு💔 அவரு எனக்கு கிடைக்க மாட்டாரு 😭 ஆனா, Azeem"... Rojasree Open Heart Interview
- Kamal Haasan Is Always A LION🔥 Cinema Needs Him💥 Narain's Fan Boy Moment🤩 Vikram 100💥
- 🔴LIVE: இனி Friendship-க்கு இடமில்லை! ஆட்டம் சூடுபிடிச்சுருச்சு😳! எல்லாரையும் வச்சு செய்த Fatman💥😱
- "Kamal Sir நீங்க இந்த வயசுல இவ்ளோ விஷயம் பண்ணுவீங்கனு நினைக்கல"💥 Udhayanidhi Stalin பெருமிதம்😇
- அழுதுட்டே வெளிய போன SHIVIN 😢 KATHIR GIRLFRIEND வந்தது தான் காரணமா?
- 🔴LIVE: "Top 5 Vikraman, Shivin, Azeem, Amudha, Rachita-தானா?" Comment Your Choice 🔥Fatman Review💥
- 🔴LIVE: "Myna, நீ Bigg Boss-க்கு லாய்க்கு இல்ல" திட்டி தீர்த்த Yogi😳 தோலுரிக்கும் Fatman Review
- AZEEM மாதிரி பேசி அசத்திட்டாரு😂... Bigg Boss வீட்டை சிதறவிட்ட Amudhavanan மகன்
- Kamal & Maniratnam Project Ready💥 உலகநாயகனை Confuse பண்ண Stunt Masters😅 Vikram 100
- 🔴LIVE: "செருப்பால அடிச்சுட்டு Congrats-அ" கடுப்பான Rachitha 😭 தோலுரிக்கும் Fatman Review
- Bigg Boss-ல பொய்யா பழகுறாங்க, 🥲 என்ன பண்ணாலும் பயமா இருக்கும் - Janany,