www.garudabazaar.com

"தப்பா இருக்கு அசிம் நீங்க பேசுறது".. "அடுத்த கேம் உங்க ரெண்டு பேரையும்".. Task-ல் வெடித்த மோதல்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6 ஆவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. சுமார் 80 நாட்களை கடந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி ஏறக்குறைய இறுதிக் கட்டத்தை தற்போது எட்டி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

Azeem rachitha and shivin clash in bigg boss new task

Also Read | "அட, சூப்பர்ல".. வாரிசு ட்ரைலரில் இடம்பெற்ற பிக் பாஸ் பிரபலம்.. Varisu Trailer!!

அப்படி ஒரு சூழலில், இனி வரும் நாட்களில் இறுதி சுற்று வரை முன்னேற அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி ஆக வேண்டும் என்ற நிலையும் உள்ளது.

சமீபத்தில் மணிகண்டா ராஜேஷ் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பின்னர் தற்போது 8 போட்டியாளர்கள் வீட்டுக்குள் இருக்கின்றனர். விரைவில் Finale வர உள்ளதால், அடுத்தடுத்து எந்தெந்த போட்டியாளர்கள் முன்னேறி செல்வார்கள் என்பதை அறியவும் பார்வையாளர்கள் ஆவலாக உள்ளனர்.

Azeem rachitha and shivin clash in bigg boss new task

இதற்கு மத்தியில், அனைத்து போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் எதிர்பார்த்த Ticket To Finale சுற்று தற்போது நடைபெற்று வருகிறது. நிறைய கடினமான போட்டிகள் உள்ளிட்டவை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அனைத்து போட்டியாளர்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் இருப்பதால் எந்த போட்டியாளர் முதல் ஆளாக இறுதி சுற்றுக்கு முன்னேறுவார் என்பதை அறியவும் ஆவலாக உள்ளனர்.

இந்த நிலையில், சைக்கிள் டாஸ்க்கின் போது அசிம் மற்றும் ரச்சிதா, ஷிவின் இடையே நடந்த வாக்குவாதம் தொடர்பான விஷயம், அதிக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Azeem rachitha and shivin clash in bigg boss new task

Ticket To Finale டாஸ்க்கில் ஒன்றாக மிதிவண்டி டாஸ்க் ஒன்று கொடுக்கப்படுகிறது. இதில் மாறி மாறி போட்டியாளர்கள் இரண்டு சைக்கிள்களை இயக்க மற்ற போட்டியாளர்கள் முன்னாடியும் பின்னாடியும் மாறி மாறி ஏறிய படி இருக்கின்றனர். அப்போது ஒரு சைக்கிளில் இருந்து மற்றொரு சைக்கிளில் மாறி அமர்வதற்கு 10 வினாடிகள் மேல் எடுத்து கொண்டால் அவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றும் தெரிகிறது.

அப்படி இருக்கையில், 10 வினாடிகள் மேல் மிதிவண்டியில் அமர அசிம் நேரம் எடுத்துக் கொண்டதால் அவர் வெளியேறியதாக பிக் பாஸ் அறிவித்தார். அவர் வெளியேறிய மறுகணமே ஷிவின் மற்றும் ரச்சிதா ஆகியோரை நோக்கி, "அங்க நான் ஓட்டிட்டு இருந்துருப்பேன் ஒழுங்கா. உங்களுக்கும் (ஷிவினுக்கும்) ரச்சிதாவுக்காக மட்டும் தான் நான் மாறினேன்" என கூறுகிறார்.

Azeem rachitha and shivin clash in bigg boss new task

அந்த சமயத்தில், உங்களிடம் கேட்டு நீங்கள் ஓகே சொன்ன பிறகு தான் அந்த நேரத்திற்கு ஏற்ப நாங்களும் மாறினோம் என ஷிவின் தனது பதில் கருத்துக்களை கூற, "கடைசில பாதிக்கப்பட்டது நானா நீங்களா?" என அசிம் கேட்கிறார். அவர் பேசுவது தப்பாக இருப்பதாகவும் சற்று ஆவேசமாக ரச்சிதா முறையிட, "சொல்லிட்டு செய்றேன். அடுத்த கேம் உங்க ரெண்டு பேரையும் வச்சு செய்வேன்" என்றும் ரச்சிதா மற்றும் ஷிவின் ஆகியோரை பார்த்து அசிம் சற்று ஆவேசத்துடன் பேசுகிறார்.

Also Read | நோட் பண்ணீங்களா? வாரிசு ட்ரைலரில் வரும் விஜய் மற்றும் சரத்குமார் படத்தோட டைட்டில்.! Varisu Trailer

தொடர்புடைய இணைப்புகள்

Azeem rachitha and shivin clash in bigg boss new task

People looking for online information on Azeem, Bigg Boss 6, Bigg boss 6 tami, Bigg Boss Tamil, Rachitha, Shivin will find this news story useful.