www.garudabazaar.com

"இங்லீஷ்லயே பேசுறேனா? No No Unfortunately".. கதிரை வெச்சு செஞ்ச ADK, அசீம்! கமல் கொடுத்த சான்ஸ்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Kamal gave chance to kathiravan ask himself bigg boss 6

Also Read | இந்தா வந்துருச்சுல.. பிரபல TV சேனலில் ஒளிபரப்பாகும் 'பொன்னியின் செல்வன்'.. டைம் எப்போ?

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்ட ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வைல்டு கார்டு எண்ட்ரியாக விஜய் டிவி மைனா நந்தினி உள்ளே இணைந்தார்.

இவர்களுள் ஜி.பி.முத்து, அசல் கோலார்,  ராபர்ட்,  ஷெரினா, ராம் ராமசாமி, ஜனனி, VJ மகேஸ்வரி, ஆயிஷா, ஷாந்தி அரவிந்த், குயின்சி, நிவாஷினி ஆகியோர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டனர். இந்நிலையில் வார இறுதி என்பதால் கமல்ஹாசன் தோன்றி போட்டியாளர்களுடன் உரையாடினார். ஒவ்வொருவரின் தனிப்பட்ட கேள்விகளுக்கு கமல் பதில் அளித்தார். அதேபோல, சிலருக்கு அட்வைஸ்-ம் செய்தார். ஞாயிற்றுக்கிழமை என்பதால் எலிமினேஷன் ஆகப்போவது யார்? என கமல் அறிவித்தார். அதன்படி, மணிகண்ட ராஜேஷ் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியிருக்கிறார்.

Kamal gave chance to kathiravan ask himself bigg boss 6

இதனிடையே இந்த வார இறுதியில் பிக் பாஸ் வீட்டுக்கு வந்த கமல்ஹாசன் போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க் வைத்தார். அதன்படி ஒரு போட்டியாளர் இன்னொரு போட்டியாளராக மாறி பேச வேண்டும். அவர்களிடம் அவர் எந்த போட்டியாளராக மாறினாரோ அந்த போட்டியாளரிடம் கேட்க வேண்டிய கேள்விகளை எல்லாம் சக போட்டியாளர்கள் கேட்கலாம்.

அந்த வகையில் ஏடிகே கதிரவனாக மாறி , கதிரவன் ஸ்டைலில் பேசுவதற்காக நிற்கிறார். கதிரவன் போலவே மொழி பாவனையை ஏடிகே சிறப்பாக வெளிப்படுத்தினார்.

அப்போது ஷிவின், “எதற்காக எல்லா கேள்விகளுக்கும் சிரிப்பையே பதிலாக கொடுத்து நழுவி செல்கிறீர்கள்” என்று கேட்கிறார். அதற்கு ஏடிகே ஒரு வேடிக்கையான பதிலை கதிரவன் ஸ்டைலில் சொல்கிறார். இதேபோல் கழுவுற மீனில் நழுவுற மீன் என்று கமல் சார் சொன்னது பற்றி உங்கள் கருத்து என்ன என்று மணிகண்டன் கேட்கிறார். அவரை தொடர்ந்து விக்ரமன் கேட்கும் பொழுது, “ஒரு பிரச்சனை குறித்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது அங்கு சென்று அந்த பிரச்சனை பற்றி பேசாமல் ஸ்நாப் இட் என்று கூறினால் அந்த பிரச்சினை சரியாகிவிடும் என்று கருதுகிறீர்களா? உண்மையில் அப்படி நம்புகிறீர்களா?” என்று கேட்க, அதற்கு ஏடிகே, “அந்த வகையிலாவது நான் பங்களிப்பு செய்கிறேனே? பிரச்சனையே வேண்டாமே” என சொல்கிறார்.

Kamal gave chance to kathiravan ask himself bigg boss 6

இறுதியில் கமல்ஹாசன் பேசும்போது, “மற்றவர்களுக்கு இப்படி ஒரு வாய்ப்பு கொடுக்கவில்லை. கதிரவன் உங்களுக்கு மட்டும் ஒரு ஸ்பெஷல் வாய்ப்பு கொடுக்கிறேன். நீங்களே உங்களிடம் கேள்விகளை கேட்கலாம். அதாவது கதிரவனிடம் கதிரவன் கேள்விகளை கேட்கலாம். கதிரவனிடமாவது கேள்விகளை கேளுங்கள்!” என்று தன் பங்குக்கு தக் லைஃப் பண்ணுகிறார். அப்போது, டிப்ளமேட்டிக்காக இருப்பதாக கதிரவன் குறித்து சொல்கிறார்கள், ஆனால் அது யாரையும் புண்படுத்துவதில்லை, இதை பற்றி நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என கேட்கப்பட்டது.

இதற்கு கதிரவனாக பதில் சொல்லும் ஏடிகே, கதிரவன் ஸ்டைலில், “எனக்கு பிரச்சனை வரும் வரையில் அது பற்றி எனக்கு கவலை இல்லை” என்று பதில் சொல்ல, ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் விழுந்து சிரித்தனர். கதிரவனும் இதை ஸ்போர்டிவாக எடுத்துக்கொண்டு சிரித்தபடி அமர்ந்திருந்தார். கதிரவனின் இயல்பான சுபாவமும், பிக்பாஸ் வீட்டை அவர் எதிர்கொண்ட விதத்தையும் ஏடிகே ஜாலியாக இமிடேட் செய்து காண்பித்த விசயம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

Also Read | LOVE TODAY படத்தின் இந்தி ரீமேக் ரைட்ஸ்.. தயாரிப்பாளர் போனி கபூர் போட்ட பரபர ட்வீட்!

தொடர்புடைய இணைப்புகள்

Kamal gave chance to kathiravan ask himself bigg boss 6

People looking for online information on ADK, Bigg Boss 6, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil 6, Kamal, Kathiravan will find this news story useful.