www.garudabazaar.com

'வாரிசு' டிரெய்லர் & 'துணிவு' டிரெய்லர்.. எது பிடிச்சிருந்தது?.. நடிகர் மேத்யூ வர்கீஸ் செம பதில்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி  'வாரிசு' படத்தை இயக்கி முடித்துள்ளார்.

Mathew Varghese Exclusive Interview about Vijay Varisu Movie

Also Read | 'வாரிசு' படத்தின் கலை இயக்குனர் சுனில் திடீர் மரணம்.. துல்கர் சல்மான் இரங்கல்!

நடிகர்கள் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடிக்கிறார்கள்.

தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படம் வரும் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Mathew Varghese Exclusive Interview about Vijay Varisu Movie

இந்த படத்தின் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஏரியா உரிமத்தை பிரபல வினியோகஸ்தர் முத்துக்கனி கைப்பற்றி உள்ளார். மேலும், இந்த படத்தின் திருச்சி தஞ்சாவூர் ஏரியாவை பிரபல வினியோகஸ்தரான ராது இன்ஃபோடெயின்மெண்ட் வி.எஸ். பாலமுரளி  கைப்பற்றி உள்ளார். சேலம்  ஏரியாவை வினியோகஸ்தர் செந்தில் கைப்பற்றியுள்ளார். மதுரை உரிமத்தை Five Star Flims நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Mathew Varghese Exclusive Interview about Vijay Varisu Movie

மேலும், வாரிசு படத்தின் சென்னை சிட்டி, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், வட & தென் ஆற்காடு ஆகிய ஏரியாக்களை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா, கடந்த 24.12.2022-ல் நடைபெற்றது. நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இந்த நிகழ்வில், விஜய், ராஷ்மிகா மந்தனா , எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜூ,  இயக்குனர் வம்சி பைடிபள்ளி, இசையமைப்பாளர் தமன், சங்கர் மகாதேவன், டிரம்ஸ் சிவமணி, பிரகாஷ் ராஜ், சரத்குமார், நடிகர் ஷாம் மற்றும் பலர் கலந்துகொண்டனர். வாரிசு படத்தின் அனைத்து 5 பாடல்களும் வெளியாகியுள்ளன.

Mathew Varghese Exclusive Interview about Vijay Varisu Movie

வாரிசு படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வாரிசு திரைப்படம் ஜனவரி மாதம் 11 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாரிசு படத்தில் நடித்துள்ள நடிகர் மேத்யூ வர்கீஸ் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேகமான பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், "வாரிசு டிரெய்லர் துணிவு டிரெய்லர் இரண்டில் எந்த டிரெய்லர் ரொம்ப பிடிச்சிருந்தது?" என்ற கேள்விக்கு, "எனக்கு தெரிந்து ரொம்ப நாள் கழித்து முதல் முறையாக இரண்டு படங்களின் டிரெய்லரும் செமயாக உள்ளது. ரொம்ப நாள் கழித்து ஒரே நாளில் இரண்டு படங்களும் ரிலீஸ் ஆவது சினிமா துறைக்கு ஆரோக்கியமானது." என மேத்யூ வர்கீஸ் பதில் அளித்துள்ளார்.

Also Read | ஸ்கேன் வீடியோவை வெளியிட்டு கர்ப்பமாக இருப்பதை அறிவித்த பிரபல சீரியல் நடிகை 😍..

'வாரிசு' டிரெய்லர் & 'துணிவு' டிரெய்லர்.. எது பிடிச்சிருந்தது?.. நடிகர் மேத்யூ வர்கீஸ் செம பதில்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Mathew Varghese Exclusive Interview about Vijay Varisu Movie

People looking for online information on Mathew Varghese, Mathew Varghese Exclusive Interview, Varisu, Vijay, Vijay Varisu Movie will find this news story useful.