www.garudabazaar.com

"பெயிடு ஹாஸ்டல்லயா இருக்கீங்க".. ‘நேருக்கு நேர்’.. அசிம் Vs ரச்சிதா... அனல் பறந்த வாதம்..! Bigg Boss 6 Tamil

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

Ticket to Final Rachitha Azeem Debate Bigg Boss 6 Tamil

இந்நிலையில், தற்போது பிக்பாஸ் 6-வது சீசன் ஆரம்பமாகி உள்ளது. இதில், பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நபர்களும் புதிய சீசனில் போட்டியாளர்களாக களமிறங்கினர். அதன்படி இந்நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரச்சிதா மகாலட்சுமி, மணிகண்டா ராஜேஷ், சாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி, (வைல்டு கார்டு எண்ட்ரியில்) மைனா உள்ளிட்ட நபர்கள் பங்கேற்றனர்.

இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலேயே வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். பின்னர் அசல், ஷெரீனா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்ஸி, ராம், ஆயிஷா, ஜனனி, தனலட்சுமி ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். கடைசிவாரத்தில் பிக்பாஸ் வீட்டில் இருந்து மணிகண்டா ராஜேஷ் வெளியேறினார். தற்போது இந்நிகழ்ச்சி 85 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.

தற்போது 8 போட்டியாளர்கள் வீட்டுக்குள் இருக்கின்றனர். விரைவில் Finale வர உள்ளதால், அடுத்தடுத்து எந்தெந்த போட்டியாளர்கள் முன்னேறி செல்வார்கள் என்பதை அறியவும் பார்வையாளர்கள் ஆவலாக உள்ளனர். இதற்கு மத்தியில், அனைத்து போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் எதிர்பார்த்த Ticket To Finale சுற்று தற்போது நடைபெற்று வருகிறது. நிறைய கடினமான போட்டிகள் உள்ளிட்டவை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் நிறைய டாஸ்க்குகள் அரங்கேறி வருகிறது. இதில் வெற்றி பெறும் நபர்கள் ஒவ்வொரு சுற்று முடியும் போது புள்ளிகள் அடிப்படையில் முன்னிலை வகித்தும் வருகின்றனர். இதற்கு மத்தியில், Debate டாஸ்க் நடந்திருந்தது. இதில் இரண்டு போட்டியாளர்கள் மாறி மாறி மேற்கொண்டிருந்த நிறைய விவாதங்கள் பெரிய அளவில் விறுவிறுப்பை எகிற வைத்திருந்தது.

Ticket to Final Rachitha Azeem Debate Bigg Boss 6 Tamil

‘நேருக்கு நேர்’ என்கிற இந்த ஷோவில் இரண்டு நபர்கள் நேருக்கு நேர் விவாதிக்க வேண்டும். மற்ற போட்டியாளர்கள் இதைபார்த்து ‘விளக்கை’ எரிய வைத்து பாய்ன்ஸ் கொடுப்பார்கள். யாரின் விளக்கு அதிக எண்ணிக்கையில் உள்ளதோ, அவரே வெற்றியாளர். இதில் மோதிக்கொண்டனர் அசிம் Vs ரச்சிதா.

இதில் ரச்சிதா,  “நான் யாரையும் புண்படுத்துவதில்லை பிறருக்கு மரியாதை தருவது ஒரு நற்குணம்” என்று சொல்ல, தன்னோட  பிளஸ் பாயிண்டைப் சொல்வதை விட, பிறரைக் குறை சொல்வதில்தான் ரச்சு ஆர்வம் காட்டுவதாக அசிம் தெறிக்கிறார். ரச்சுவோ, இயல்பாக இருப்பதெ தன் இயல்பு என்று சொல்ல, சமையல் டீமில் இருந்து சமையல் செய்த சேவையை தவிர வேற என்ன தான் செய்தீங்க? என ரச்சுவை வாங்கு வாங்கு என வாங்கினார்.

அதுவரை அமைதிகாத்த ரச்சிதா, “எல்லா டாஸ்க்கும் பண்ணிருக்கேன். எல்லா டாஸ்கும் நான் பண்ணிருக்கேன்” என சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் ஜெயம் ரவி அப்பாவிடம் பேசுவது போல், ஒரே நேரத்தில் சூடாகவும் சுதாரிப்பாகவும் பேசினார். அப்போதும் சளைக்காத அசிம் பிரகாஷ் ராஜ் மாதிரி, “வேற.. வேற.. வேற.. என்ன என்ன எண்டர்டெயின்மெயின்ட் பண்ணியிருக்கீங்க?” என்று கேட்டதுடன் “நீங்க என்ன பெய்ட் ஹாலிடேஸ்லயா இருக்கீங்க?” ன்னு ரசிகர்கள் கேட்டது நினைவிருக்கா?” என கிடுக்குப்பிடி கேட்டார்.

ரச்சுவோ, “நான் நானாக இருக்கேன். போன வாரம் நடந்ததை விடுங்க. குறை சொல்வதே வேலை.. உங்க கண்ணுக்கு நிறைகள் தெரியாது” என்று கூறினார். ஆனாலும் அசிமின் அர்ஜூனா கேள்விக்கணைகள் நிற்கவில்லை. இறுதியில் அதிக வாக்கு பெற்று வென்றார் ரச்சு!

Also Read | "தயவு செஞ்சு புரிஞ்சிட்டு பேசு".. Task முடிஞ்ச பிறகு கண்ணீர் விட்டு கதறிய ஷிவின்... என்ன ஆச்சு?

தொடர்புடைய இணைப்புகள்

Ticket to Final Rachitha Azeem Debate Bigg Boss 6 Tamil

People looking for online information on Azeem, Bigg boss tamilbigg boss 6 tamilbigg boss 6bigg boss tamil, Rachitha will find this news story useful.