www.garudabazaar.com

"பொங்கலுக்கு வாரிசு படத்தில் இதை எல்லாம் எதிர்பார்க்கலாம்".. நடிகர் மேத்யூ வர்கீஸ் EXCLUSIVE!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வாரிசு படத்தில் நடித்துள்ள நடிகர் மேத்யூ வர்கீஸ் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேகமான பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

Actor Mathew Varghese Exclusive about Varisu Expectations

Also Read | 'வாரிசு' டிரெய்லர் & 'துணிவு' டிரெய்லர்.. எது பிடிச்சிருந்தது?.. நடிகர் மேத்யூ வர்கீஸ் செம பதில்!

தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி  'வாரிசு' படத்தை இயக்கி முடித்துள்ளார்.

நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடிக்கிறார்கள்.

 Actor Mathew Varghese Exclusive about Varisu Expectations

இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசையமைப்பாளர்  எஸ் தமன் இசையமைத்துள்ளார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்துள்ளார். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

 Actor Mathew Varghese Exclusive about Varisu Expectations

தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படம் வரும் ஜனவரி மாதம் 11 ஆம் தேதி திரையரங்குகளில்   வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா, கடந்த 24.12.2022 அன்று நடைபெற்றது. நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த இந்த நிகழ்வில், விஜய், ராஷ்மிகா மந்தனா , எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜூ,  இயக்குநர் வம்சி பைடிபள்ளி, இசையமைப்பாளர் தமன், சங்கர் மகாதேவன், டிரம்ஸ் சிவமணி, பிரகாஷ் ராஜ், சரத்குமார், நடிகர் ஷாம் மற்றும் பலர் கலந்துகொண்டனர். மேலும் வாரிசு படத்தின் டிரெய்லரும் வெளியாகி உள்ளது.

 Actor Mathew Varghese Exclusive about Varisu Expectations

இந்நிலையில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு வாரிசு படத்தில் நடித்துள்ள நடிகர் மேத்யூ வர்கீஸ் பேட்டி அளித்துள்ளார். அதில், "வாரிசு படத்தில் ரசிகர்கள் எந்த மாதிரியான விஷயங்களை எல்லாம் எதிர்பார்த்து வரலாம்?" என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், "வாரிசு நல்ல ஃபேமிலி பொழுது போக்கு திரைப்படம். காமெடி, செண்டிமெண்ட், ஆக்சன் சேர்ந்த ஒரு படம். 6-ல் இருந்து 60 வரை உள்ள வயதினருக்கு வாரிசு பிடிக்கும். கதைக்கு தேவையான ஆக்சன், எமோஷனல் காட்சிகள் படத்தில் ஒன்றி வரும் வகையில் படம் இருக்கும்". என வர்கீஸ் பதில் அளித்துள்ளார்.

Also Read | ஸ்கேன் வீடியோவை வெளியிட்டு கர்ப்பமாக இருப்பதை அறிவித்த பிரபல சீரியல் நடிகை 😍..

"பொங்கலுக்கு வாரிசு படத்தில் இதை எல்லாம் எதிர்பார்க்கலாம்".. நடிகர் மேத்யூ வர்கீஸ் EXCLUSIVE! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Actor Mathew Varghese Exclusive about Varisu Expectations

People looking for online information on Mathew Varghese, Mathew Varghese Exclusive Interview, Varisu, Vijay, Vijay Varisu Movie will find this news story useful.