www.garudabazaar.com

Task நடுவே திடீர்ன்னு சத்தம் போட்டு கத்திய விக்ரமன்... வாயை பொத்தி சிரிச்ச ஷிவின்.. இதுக்காக தானா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6 ஆவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. சுமார் 80 நாட்களை கடந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி ஏறக்குறைய இறுதிக் கட்டத்தை தற்போது எட்டி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

Vikraman shouts in cycle task amudhavanan and shivin reacts

Also Read | "என்னை ஒரு கேள்வி கூட கேக்கல, ஆனா ரச்சிதாவுக்கு மட்டும்"... விக்ரமனை ஜாலியாக கிண்டிய ADK!!

அப்படி ஒரு சூழலில், இனி வரும் நாட்களில் இறுதி சுற்று வரை முன்னேற அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி ஆக வேண்டும் என்ற நிலையும் உள்ளது.

சமீபத்தில் மணிகண்டா ராஜேஷ் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பின்னர் தற்போது 8 போட்டியாளர்கள் வீட்டுக்குள் இருக்கின்றனர். விரைவில் Finale வர உள்ளதால், அடுத்தடுத்து எந்தெந்த போட்டியாளர்கள் முன்னேறி செல்வார்கள் என்பதை அறியவும் பார்வையாளர்கள் ஆவலாக உள்ளனர்.

இதற்கு மத்தியில், அனைத்து போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் எதிர்பார்த்த Ticket To Finale சுற்று தற்போது நடைபெற்று வருகிறது. நிறைய கடினமான போட்டிகள் உள்ளிட்டவை அடுத்தடுத்து நடைபெற்று வரும் நிலையில், ஒவ்வொரு போட்டியாளரும் தங்கள் திறனை நிரூபித்தும் வருகிறார்கள். மேலும், அனைத்து போட்டியாளர்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் இருப்பதால் எந்த போட்டியாளர் முதல் ஆளாக இறுதி சுற்றுக்கு முன்னேறுவார் என்பதை அறியவும் அவர்கள் ஆவலாக உள்ளனர்.

Vikraman shouts in cycle task amudhavanan and shivin reacts

இதனிடையே, Ticket To Finale டாஸ்க்கில் மிதிவண்டி டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. இதில் மாறி மாறி போட்டியாளர்கள் மூன்று சைக்கிள்களை இயக்க மற்ற போட்டியாளர்கள் முன்னாடியும் பின்னாடியும் மாறி மாறி ஏறிய படி இருக்கின்றனர். ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்தில் மாறி அமர்வதற்கு 10 வினாடிகள் மேல் எடுத்து கொண்டால் அவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றும் தெரிகிறது.

அப்படி இருக்கையில், அமுதவாணன், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகியோர் ஒரே சைக்கிளில் இருக்கின்றனர். அப்போது அவர்கள் மாறுவதாக சரியாக திட்டம் போட்டு 10 வினாடிகளுக்குள் எப்படி மாற வேண்டும் என்பதையும் யோசிக்கின்றனர்.

Vikraman shouts in cycle task amudhavanan and shivin reacts

இதனைத் தொடர்ந்து, திட்டம் போட்டது போலவே மூன்று பேரும் மாறும் சூழலில், சைக்கிளின் இருக்கையில் விக்ரமன் அமர்ந்து மிதிக்கவும் தொடங்குகிறார். திடீரென அவர் வலியில் கத்தவும் தொடங்க, இருக்கை கடினமாக இருப்பதாகவும் கூறி கத்தியது அமுதவாணன் மற்றும் ஷிவின் ஆகியோரை சிரிக்கவும் வைத்திருந்தது.

Also Read | டாஸ்க் நடுவுல பிக் பாஸ் அறிவிச்ச புது விதி.. கொஞ்ச நேரத்தில் வெளியேறிய மைனா.. காரணம் இது தான்!!

தொடர்புடைய இணைப்புகள்

Vikraman shouts in cycle task amudhavanan and shivin reacts

People looking for online information on Amudhavanan, Bigg Boss 6, Bigg boss 6 tami, Bigg Boss Tamil, Shivin, Vikraman will find this news story useful.