www.garudabazaar.com
iTechUS

“அறம் வெல்லும்” - வெளியேறிய விக்ரமன்.. அம்பேத்கர் படத்தை வணங்கி நெகிழ்ச்சி.. bigg boss 6

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் கிராண்ட் ஃபினாலே நடந்துள்ளது. நடிகர் கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

bigg boss Vikraman Pays Respect to Bhim Ambedkar

Also Read | "வாடவும் மாட்டேன்.. ஆடவும் மாட்டேன்!." - பிக்பாஸ் Title வென்ற அசிம்... BB6 Grand Finale

இதில், பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நபர்களும் புதிய சீசனில் போட்டியாளர்களாக களமிறங்கினர். அதன்படி இந்நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரச்சிதா மகாலட்சுமி, மணிகண்டா ராஜேஷ், சாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி, (வைல்டு கார்டு எண்ட்ரியில்) மைனா உள்ளிட்ட நபர்கள் பங்கேற்றனர்.

bigg boss Vikraman Pays Respect to Bhim Ambedkar

Image Credit : vijay television

இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலேயே வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். பின்னர் அசல், ஷெரீனா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்ஸி, ராம், ஆயிஷா, ஜனனி, தனலட்சுமி,  மணிகண்டா ராஜேஷ், ரச்சிதா, ADK, கதிரவன், அமுதவாணன், மைனா ஆகியோர் வெளியேறினர். இந்நிலையில் ஃபினாலேவில் விக்ரமன் & அசிம் இருவரில் அசிமின் வெற்றியை அறிவிப்பதற்கு முன்பாக, ஷிவின் வெளியேறினார்.

பின்னர் அசிம் வெற்றி பெறுவதாக கமல் அறிவித்திருந்தார். அதன் பின்னர் பேசிய விக்ரமன், "காலம் பூராவும் போராடிக் கொண்டிருக்கும் போராட்ட குணம் நிறைந்தவன் நான். என் போராட்டம் தொடரும். உலகம் முழுவதும் இருக்கும் தாய் தமிழ் சொந்தங்களின் தீர்ப்பை வணங்கி ஏற்றுக்கொள்கிறேன்." என உருக்கத்துடன் குறிப்பிட்டார். இந்நிலையில் விக்ரமன் வெளியேறியதும் அம்பேத்கர் புகைப்படத்துக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தி வணங்கினார்.

bigg boss Vikraman Pays Respect to Bhim Ambedkar

Image Credit : vijay television

முன்னதாக பிக்பாஸில் இருந்தபோது வாக்கு சேகரித்த விக்ரமன், “மக்கள் உங்களை நம்பித்தான் பிக்பாஸ் வந்தேன். பண பலமோ, அதிகார பலமோ கொண்ட குடும்ப பின்னணி இல்லை எனக்கு. எளிய குடும்பத்தில் இருந்து வந்த நான் கொள்கையும் செயலும் ஒன்றாக இருக்குமாறு வாழ்வேன், கடும் விமர்சனங்கள் வரலாம், ஆனாலும் அவற்றை உடைத்து இங்கு வந்தேன். யாரும் யாருக்கும் கீழானவரோ, மேலானவரோ இல்ல. மற்றவர்களின் கருத்துக்களோடுதான் முரண்பட்டேன், ஆனால் அவர்களுடன் இல்லை. எனது விளையாட்டால் உங்களுக்கு முகச்சுளிப்பு உண்டாகி இருக்கக் கூடாது. உங்கள் வீட்டுப் பிள்ளையா நினைத்து எனக்கு வாக்களிங்க, கைகூப்பி கேட்கிறேன், அறம் வெல்லும்” என்றார்.

Also Read | "காலம் பூராவும் என் போராட்டம்.." - வின்னர் அறிவிப்புக்கு பின் விக்ரமன் உருக்கம்..! Bigg Boss 6

தொடர்புடைய இணைப்புகள்

bigg boss Vikraman Pays Respect to Bhim Ambedkar

People looking for online information on Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Vikraman will find this news story useful.