www.garudabazaar.com
iTechUS

"என்னால தான் அசல் வெளிய போனார்னு அவர் நெனைக்குறாரு".. ரகசியம் உடைத்த நிவா bigg boss 6 tamil

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் கிராண்ட் ஃபினாலே நடந்துள்ளது. நடிகர் கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

Nivashini talks to ayesha bigg boss 6 tamil

Also Read | "காலம் பூராவும் என் போராட்டம்.." - வின்னர் அறிவிப்புக்கு பின் விக்ரமன் உருக்கம்..! Bigg Boss 6

இதில், பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நபர்களும் புதிய சீசனில் போட்டியாளர்களாக களமிறங்கினர். அதன்படி இந்நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரச்சிதா மகாலட்சுமி, மணிகண்டா ராஜேஷ், சாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி, (வைல்டு கார்டு எண்ட்ரியில்) மைனா உள்ளிட்ட நபர்கள் பங்கேற்றனர்.

இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலேயே வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். பின்னர் அசல், ஷெரீனா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்ஸி, ராம், ஆயிஷா, ஜனனி, தனலட்சுமி,  மணிகண்டா ராஜேஷ், ரச்சிதா, ADK, கதிரவன், அமுதவாணன், மைனா ஆகியோர் வெளியேறினர். இந்நிலையில் ஃபினாலேவில் விக்ரமன் & அசிம் இருவரில் அசிமின் வெற்றியை அறிவிப்பதற்கு முன்பாக, ஷிவின் வெளியேறினார்.

Image Credit : vijay television

முன்னதாக பிக்பாஸ் வீட்டின் ஃபினாலேவின் முந்தைய எபிசோடில், ஆயிஷாவிடம் பேசிய நிவாஷினி மிகவும் வருத்தமாக பேசியுள்ளார். அதில், “என்னால தான் அசல் வெளியேற வேண்டியதா போச்சுனு அசிம் நினைக்கிறாரு போல.. வெளில வந்து பாருங்க உண்மை நிலவரம் தெரியும்ன்னு சொன்னேன்” என்று ஆயிஷாவிடம் வருந்திக் கூறினார். இதனிடையே   ஃபினாலே எபிசோடில் பேசிய அசல், “சோசியல் மீடியாவை விட நேரில் பார்ப்பவர்களிடம் இருந்து நல்ல ரெஸ்பான்ஸ் வருது, நான் பண்ணிய பாடல்களை பலரும் இப்போது தெரிந்துகொண்டனர்” என கூற,  அதற்கு கமல், “பிக்பாஸ் போனாதான் திறமைகள் தெரியணும்னு இல்ல.. வள்ளுவரின் குறளையே பலரும் பஸ்ல தான் படிச்சாங்க.. நான்லாம் திருக்குறள் பஸ்ல தான் படிக்க ஆரம்பிச்சேன், பாடம் நடத்தும்போது இல்ல” என மோட்டிவேட் செய்தார்.

Also Read | "வாடவும் மாட்டேன்.. ஆடவும் மாட்டேன்!." - பிக்பாஸ் Title வென்ற அசிம்... BB6 Grand Finale

தொடர்புடைய இணைப்புகள்

Nivashini talks to ayesha bigg boss 6 tamil

People looking for online information on Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Nivashini will find this news story useful.