www.garudabazaar.com
iTechUS

"விக்ரமன் கூட சண்டையா?"... Finale வில் விடை சொன்ன ADK.. மனம் நெகிழ வைத்த வீடியோ!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த 105 நாட்களுக்கும் மேலாக தமிழில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் தற்போது வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.

ADK Clarifies about rumours with vikraman bigg boss finale

Also Read | "என்னால தான் அசல் வெளிய போனார்னு அவர் நெனைக்குறாரு".. ரகசியம் உடைத்த நிவா bigg boss 6 tamil

ஆரம்பத்தில் 21 போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் களமிறங்கி இருந்த நிலையில், ஒவ்வொரு எபிசோடுகளும் விறுவிறுப்பு நிறைந்த வண்ணம் சென்றிருந்தது. கடைசியில், 6 போட்டியாளர்கள் Finale வாரம் முன்னேற்றம் கண்டிருந்ததையடுத்து முதல் ஆளாக பண மூட்டையை எடுத்துக் கொண்டு கதிரவன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார்.

இதற்கடுத்து, அமுதவாணன் பண பெட்டியை எடுத்துக் கொண்டும், மைனா நந்தினி எலிமினேட் ஆகவும் செய்ய, பிக் பாஸ் நிகழ்ச்சியின் Finale வாரத்தில் 3 போட்டியாளர்கள் முன்னேற்றம் கண்டிருந்தனர். அசிம், ஷிவின் மற்றும் விக்ரமன் ஆகியோர் Finale வரை முன்னேறியது முதல் யார் டைட்டில் வின்னராக அறிவிக்கப்படுவார் என பல்வேறு கருத்துக்களையும் பார்வையாளர்கள் கணித்து இணையத்தில் தெரிவித்தும் வந்தனர். இதனால், தொடர்ந்து பிக் பாஸ் குறித்த நிறைய கருத்துக்கள், இணையத்தில் ட்ரெண்டிங் ஆன வண்ணம் இருந்தது.

ADK Clarifies about rumours with vikraman bigg boss finale

அது மட்டுமல்லாமல், தமிழ் பிக் பாஸ் Finale வில் முதல் முறையாக 3 போட்டியாளர்கள் மேடையில் அழைக்கப்பட்டிருந்தனர். இதில், 2 ஆவது Runner Up என ஷிவின் அறிவிக்கப்பட, இதனால் வெற்றியாளர் விக்ரமனா அல்லது அசிமா என்ற விறுவிறுப்பு தொற்றிக் கொண்டது. இறுதியில், கமல்ஹாசன் அசிம் கையைத் தூக்கி வெற்றியாளர் என்றும் அறிவிக்க பார்வையாளர்கள் மற்றும் போட்டியாளர்கள் அனைவரும் ஆரவாரம் எழுப்பி உற்சாகம் அடையவும் செய்திருந்தனர்.

இதனையடுத்து, வெற்றியாளர் அசிம் மற்றும் 2 ஆவது இடம் பிடித்த விக்ரமன் ஆகியோரை பலரும் பாராட்டி தங்களது கருத்துக்களையும் வெளிப்படுத்தி வருகின்றனர். அதே போல, இருவரின் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினரும் மேடையில் வந்திருந்த தருணம் மனதை நெகிழ வைக்கும் வகையில் அமைந்திருந்தது.

ADK Clarifies about rumours with vikraman bigg boss finale

இந்த நிலையில், விக்ரமனுடன் ADK எடுத்துக் கொண்ட வீடியோ, இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

தற்போது நடந்து முடிந்த பிக் பாஸ் சீசனில் போட்டியாளராக களமிறங்கி இருந்த ADK, ஆரம்பத்தில் விக்ரமனுடன் நட்பாக இல்லை என்றாலும் நாட்கள் செல்ல செல்ல இருவருக்கும் இடையே சிறந்த நட்பு உருவாகி இருந்தது. ஆனால், ADK பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சமயத்தில் அவர் விக்ரமனை கண்டு கொள்ளாமல் கிளம்பினார் என ஒரு செய்தி பரவி இருந்தது. இதற்கு தனது ட்விட்டரில் ஏடிகே விளக்கம் கொடுத்திருந்தார்.

ADK Clarifies about rumours with vikraman bigg boss finale

இதனைத் தொடர்ந்து, தற்போது பிக் பாஸ் Finale வில் விக்ரமனுடன் இருக்கும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ADK பகிர்ந்துள்ளார். அதில், விக்ரமனை கட்டியணைத்து முத்தம் கொடுக்கும் ஏடிகே, "யாரை எல்லாம் கட்டிப் புடிக்கலையோ, அவங்கள எல்லாம் கட்டி புடிச்சாச்சு" என கூறியபடி முத்தமும் கொடுத்தார்.

தொடர்ந்து, "யப்பா, அது எல்லாம் ஒண்ணுமில்ல பா. ஒரு டென்ஷன்ல வெளிய வந்துட்டேன். நல்ல நண்பன்" என ஏடிகே கூற, "நண்பன் For a Reason" என விக்ரமன் குறிப்பிட்டார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ADK (@adkofficial)

Also Read | "காலம் பூராவும் என் போராட்டம்.." - வின்னர் அறிவிப்புக்கு பின் விக்ரமன் உருக்கம்..! Bigg Boss 6

தொடர்புடைய இணைப்புகள்

ADK Clarifies about rumours with vikraman bigg boss finale

People looking for online information on ADK, Bigg Boss 6, Bigg boss 6 tamil, Bigg Boss 6 Tamil Finale, Bigg Boss Tamil, Vikraman will find this news story useful.