www.garudabazaar.com

2022ல் கமல் fansக்கு இப்படி ஒரு ட்ரீட் இருக்கு! BiggBoss Ultimate-ல அவரே சொன்ன மாஸ் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Chennai, Bigg Boss Ultimate, 2022, Jan 31:  நடிகர் கமல்ஹாசன் விஜய் டிவியின் 5 சீசன்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.

Bigg Boss Ultimate kamal haasan fans will get this movie in 2022

பிக்பாஸ் ஓடிடி

முன்னதாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியின்போது, 24 மணி நேரமும் ஒளிபரப்பாகக் கூடிய பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சி குறித்து நடிகர் கமல்ஹாசன் அறிவித்திருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் முந்தைய சீசன்கள், அதாவது இதுவரை ஒளிபரப்பான 5 சீசன் போட்டியாளர்களைக் கொண்டு நடக்கவிருக்கும் இந்த நிகழ்ச்சிக்கு பிக்பாஸ் அல்டிமேட் என்று பெயர் சூட்டப்பட்டிருப்பதாக அறிவித்தார்.

Bigg Boss Ultimate kamal haasan fans will get this movie in 2022

அதன்படி, இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி, 24 மணி நேரமும் டிஸ்னி+ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் முதல் நாள் எபிசோடு விஜய் டிவியில் நேரடியாக ஒளிபரப்பானது. இதில் போட்டியாளர்களாக வனிதா, தாடி பாலாஜி, பாலாஜி முருகதாஸ், சுரேஷ் சக்ரவர்த்தி, அனிதா சம்பத், சுஜா வருணி, ஷாரிக் ஹசன், சினேகன், சுருதி, அபினய் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

கமல்ஹாசன் தயாரிப்பு.. சிவகார்த்திகேயன் ஹீரோ..

இதனிடையே நடிகர் கமல்ஹாசன், தமது ராஜ் கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் சோ னி பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து புதிய திரைப்படத்தை பற்றியும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அறிவித்திருந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனின் இறுதி நிகழ்ச்சியின் போது தனது படத்தின் ஹீரோ சிவகார்த்திகேயன் மற்றும் தயாரிப்பாளர் சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் விவேக் உள்ளிட்டோருடன் இணைந்து இந்த அறிவிப்பைனை கமல் வெளியிட்டிருந்தார்.

Bigg Boss Ultimate kamal haasan fans will get this movie in 2022

fansக்கு இப்படி ஒரு ட்ரீட் இருக்கு!

இந்த திரைப்படத்தை ரங்கூன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசனை இயக்கியவருமான ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இந்த திரைப்படத்தின் இதர படக்குழுவினர் பற்றிய விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிக்பாஸ் ஓடிடிக்காக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் செட்டில் நடிகர் கமல்ஹாசனிடம் ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டிருக்கிறார்

அந்த கேள்வியில், கமல்ஹாசனிடம் இருந்து, இந்த வருடம் அவருடைய ரசிகர்களுக்கு என்ன திரைப்படம் கிடைக்கும்? என அந்த ரசிகர் கேட்டதற்கு கமல்ஹாசன் மனம் திறந்து பதில் அளித்திருந்தார். அதன் படி, “ரசிகர்களுக்கு இந்த வருடம் ‘விக்ரம்’ திரைப்படம் கிடைக்கும். அதுதான் கைய்ல் இருக்கிறது!” என்று நேரடியாகவே கமல்ஹாசன் கூறிவிட்டார். 

விக்ரம் திரைப்படம் 

Bigg Boss Ultimate kamal haasan fans will get this movie in 2022

கமல்ஹாசன் நடிக்கும் "விக்ரம்" படத்தை, மாநகரம், கைதி, மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க நடிகர்கள் விஜய் சேதுபதியும், நடிகர் ஃபகத் ஃபாசிலும் இணைந்து நடிக்கின்றனர். கமல்ஹாசனின் மகனாக காளிதாஸ் ஜெயராம் நடிக்கிறார்.

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷிவானியும், மைனா நந்தினியும் நடிக்கின்றனர். கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. 'ஜல்லிக்கட்டு' படத்திற்காக தேசிய விருது வென்ற ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.

Also Read: இவர் படத்துல ஜீவா.. ஜெய்.. ஸ்ரீகாந்த்.. காம்பினேஷனே களைகட்டுதே! தொடங்கிய பூஜை!

தொடர்புடைய இணைப்புகள்

Bigg Boss Ultimate kamal haasan fans will get this movie in 2022

People looking for online information on BiggBossOTT, BiggBossUltimate, KAMALHAASAN will find this news story useful.