www.garudabazaar.com

அடேங்கப்பா.. ரஜினிக்கும் விஜய்க்கும் இப்படி ஒரு ஒற்றுமை இருக்கா? செம்ம!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: ரஜினி காந்த் - விஜய் இருவருக்குமான இணைப்பு பற்றி அமேசான் பிரைம் நிறுவனம் போட்ட  டிவீட் வைரலாகி வருகிறது.

thalapathy thalaiva connection between rajini kanth and vijay

OFFICIAL: நயன்தாரா மலையாளத்தில் நடிக்கும் புதிய படத்தில் இணைந்த பிரேமம் பட பிரபலம்! அடிப்பொலி

உலக அளவில் பிரபலமான அமேசான் நிறுவனத்தின் டிஜிட்டல் தளமான அமேசான் பிரைம் பல இந்திய, உலக படங்களின் டிஜிட்டல் OTT உரிமையை வைத்துள்ளது. இந்த படங்கள் குறித்து அவ்வப்போது டிவிட்டரில் பதிவுகள் இந்த கணக்கில் இருந்து வரும். இந்நிலையில் விஜய்,அமலாபால், சத்யராஜ் நடித்த தலைவா, ரஜினி,மம்முட்டி நடித்த தளபதி படங்களை ஒப்பிட்டு டிவீட் செய்துள்ளனர் அமேசான் பிரைம் டிவிட்டர் தளத்தினர்.

அந்த டிவீட்டில் எதச்சையாக நடந்த நிகழ்வாக தளபதி, தலைவா என இரண்டு படங்களையும் குறிப்பிட்டுள்ளனர். நடிகர் ரஜினி தனது ரசிகர்களால் தலைவா என்று அழைக்கப்படுகிறார். அதே போல் விஜய் தளபதி என்று அழைக்கப்படுகிறார். ஆனால் எதச்சையாக விஜய் நடித்த படத்தின் பெயர் தலைவா என்றும், நடிகர் ரஜினி நடித்த படத்தின் பெயர் தளபதி என்றும் வைக்கப்பட்டு ரிலீஸ் ஆகி உள்ளன. இதை அமேசான் ப்ரைம் டிவிட்டரில் இரண்டு படங்களின் போஸ்டரையும் பகிர்ந்து டிவீட் செய்துள்ளனர். இந்த டிவீட் வைரலாகி வருகிறது.

thalapathy thalaiva connection between rajini kanth and vijay

 

thalapathy thalaiva connection between rajini kanth and vijay

thalapathy thalaiva connection between rajini kanth and vijay

நடிகர் விஜய்க்கு இளைய தளபதி பட்டப்பெயர், ரஜினிகாந்த் நடித்த தளபதி படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற பின்னர் இளைய தளபதி என அப்போது ரசிகர்களால் பெயர் சூட்டிக்கொண்டார். பருத்தி வீரன் புகழ் நடிகர் சரவணனும் தனது ஆரம்பகாலங்களில் இளைய தளபதி என பட்டப்பெயர் உடையவர். நடிகர் சரவணனுக்கு பிறகு இளைய தளபதி பட்டம் விஜய்க்கு உரியதாகி விட்டது.

தற்போது விஜய், நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர்களுடன் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

DON Movie Sivakarthikeyan | டான் ரிலீஸ் தேதி.. சிவகார்த்திகேயன் காலையிலேயே வெளியிட்ட சூப்பர் அப்டேட்

thalapathy thalaiva connection between rajini kanth and vijay

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

thalapathy thalaiva connection between rajini kanth and vijay

People looking for online information on ரஜினி காந்த், விஜய், Rajini kanth, Thalapathy thalaiva, Vijay will find this news story useful.