தளபதி விஜய்யின் 'வெறித்தனம்' பாட்டுக்கு பிக்பாஸ் தர்ஷன் வேற லெவல் டான்ஸ்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Oct 09, 2019 10:54 AM
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசன் வின்னராக முகேன் அறிவிக்கப்பட்டார். இந்த சீசனில் பிக்பாஸ் வீட்டை கலகலப்பாக வைத்திருந்த சாண்டி இரண்டாம் இடம் பெற்றார்.

இதனையடுத்து பிக்பாஸ் போட்டியாளர்கள் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நடிகர் சிம்புவை தர்ஷனும், சாண்டியும் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இந்நிலையில் தர்ஷன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தளபதி விஜய்யின் வெறித்தனம் பாடலுக்கு அவர் நடனமாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அப்போது ரசிகர் ஒருவர் நீங்கள் தளபதி ரசிகரா ? என்று கேட்டிருந்தார். அதற்கு அவர் ஆம் என்று பதிலளித்தார்.
Tags : Tharshan, Bigg Boss 3, VerithanamThalapathy, Vijay