பிரபல இயக்குநருடன் ஜெயம் ரவி இணைந்துள்ள படத்தின் பர்ஸ்ட் லுக் எப்போ தெரியுமா ?
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Oct 08, 2019 10:37 PM
அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்க நாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்து வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற படம் கோமாளி. வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரித்திருந்த இந்த படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்திருந்தார்.

இதனையடுத்து ரோமியோ ஜூலியட், போகன் படங்களின் இயக்குநர் லக்ஷமன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வருகிறார். ஜெயம் ரவியின் 25வது படமாக உருவாகி வரும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார்.
ஹோம் மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு சர்வாதிகாரி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக எங்களுக்கு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் லுக் வருகிற அக்டோபர் 11 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags : Jayam Ravi, Laxman, Nidhi Agarwal, Lakshman