‘எங்க வீட்டு மாப்பிள்ளை-2 வந்துட்டா.. அதான் டப்புனு முடிச்சீங்களா?’ - ஆர்யாவை கலாய்த்த ஜெகன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘காப்பான்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் செண்டரில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

Anchor Jagan trolls Arya and Sayyesha couple in Suriya's Kaappaan Audio Launch event

லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சூர்யா, ஆர்யா, மோகன்லால், சாயீஷா, போமன் இரானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் ஷங்கர் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ஜெகன், சாயீஷா திரைத்துறையில் அறிமுகமாகி 2 ஆண்டுகள் தான் ஆகிறது அதற்குள் கல்யாணம் பண்ணி செட்டில் ஆயிட்டாங்க.. அதுக்கு என்ன காரணம் என்றால், இன்னும் ஒரு வருஷம் காத்திருந்தா ‘எங்க வீட்டு பிள்ளை2’ ஷோ எடுத்துடுவாங்கன்னு தான் என ஆர்யாவை நக்கல் செய்தார்.

இதையடுத்து பேசிய ஆர்யா, ‘எனது முதல் படம் ‘உள்ளம் கேட்குமே’-வில் ஹாரிஸ் உடன் பணியாற்றினேன். கே.வி.ஆனந்த் சாரின் முதல் படத்திலேயே நடிக்க வேண்டியது, ஒருவழியாக ‘காப்பான்’ படத்தில் அது நடந்துவிட்டது. சூர்யா எனக்கு அண்ணன் மாதிரி, அவர் இத்தனை வெற்றிகுரியவராக இருப்பதற்கு அவரது ஒழுக்கம், அற்பணிப்பு, கடின உழைப்பு தான் காரணம். மோகன்லால் சார் வேற லெவல பிரிப்பேர் பண்ணுவார். ஏற்கனவே அவருடன் பணியாற்ற வேண்டியது அதுவும் நடக்காமல் போனது. இந்த படத்தில் சாயீஷா எனக்கு ஜோடி இல்லை, ஆனால் எனது லைஃப் பார்ட்னரோடு பணியாற்றியது மறக்க முடியாது’ என்றார்.

மேலும், சூர்யா-ஜோதிகா ஜோடி நட்சத்திர ஜோடிகளில் ஒரு எடுத்துக்காட்டு, அவர் திருமணம் பற்றி ரிலேஷன்ஷிப் குறித்து அறிவுரைகளை வழங்கியிருக்கிறார் என ஆர்யா தெரிவித்தார்.

பின்னர், தமிழில் பேசிய சாயீஷா, கே.வி.ஆனந்துடன் பணியாற்றியது கனவு நனவானது போன்று இருக்கிறது. மோகன்லாலுடன் நடித்தது சந்தொஷமாக உள்ளது. சூர்யாவை பற்றி கூற வேண்டும் என்றால் 2 நிமிடம் போதாது. ஆர்யா எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார். என்னுடைய தூண் மாதிரி இருந்தார். ஹாரிஸ் உடன் முதல் படம் இது என்று கூறினார்.

‘காப்பான்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 30-ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் லைவ் அப்டேட்ஸ்க்கு இணைந்திருங்கள் Behindwoods உடன்..!