www.garudabazaar.com
iTechUS

“ரச்சிதமே ரச்சிதமே.. மாஸ்டர் மனச கலச்ச மந்திரமே😍” - ஃபினாலேவில் கலகலப்பூட்டிய கேமரா வாய்ஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் கிராண்ட் ஃபினாலே நடந்துள்ளது. நடிகர் கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

bigg boss grand finale fun comments on Robert master and Rachitha mahalakshmi bigg boss 6 tamil

Also Read | "என்னால தான் அசல் வெளிய போனார்னு அவர் நெனைக்குறாரு".. ரகசியம் உடைத்த நிவா bigg boss 6 tamil

இதில், பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நபர்களும் புதிய சீசனில் போட்டியாளர்களாக களமிறங்கினர். அதன்படி இந்நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரச்சிதா மகாலட்சுமி, மணிகண்டா ராஜேஷ், சாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி, (வைல்டு கார்டு எண்ட்ரியில்) மைனா உள்ளிட்ட நபர்கள் பங்கேற்றனர்.

bigg boss grand finale fun comments on Robert master and Rachitha mahalakshmi bigg boss 6 tamil

இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலேயே வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். பின்னர் அசல், ஷெரீனா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்ஸி, ராம், ஆயிஷா, ஜனனி, தனலட்சுமி,  மணிகண்டா ராஜேஷ், ரச்சிதா, ADK, கதிரவன், அமுதவாணன், மைனா ஆகியோர் வெளியேறினர். இந்நிலையில் ஃபினாலேவில் விக்ரமன் & அசிம் இருவரில் அசிமின் வெற்றியை அறிவிப்பதற்கு முன்பாக, ஷிவின் வெளியேறினார்.

bigg boss grand finale fun comments on Robert master and Rachitha mahalakshmi bigg boss 6 tamil

இதனிடையே ஆட்டம், பாட்டம் என சிறப்பாகவும் கலகலப்பாகவும் போன கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் கேமராவே பேசுவது போல், ஒவ்வொரு போட்டியாளரையும் ஒரு குரல் கலாய்த்தது. அதாவது பிக்பாஸ் கேமரா, தன் கோணத்தில் இருந்து ஒவ்வொரு போட்டியாளரிடமும் பேசுவதாக இந்நிகழ்வு அமைந்தது. இதில் தான் ராபர்ட் மாஸ்டரை பார்த்து பேசும்போது, “எல்லாரும் ஃபேமிலிக்காக ஷோவுக்கு வருவாங்க. ஆனா இவரு ஃபேமிலியை உருவாக்குறதுக்குன்னே ஷோவுக்கு வந்துருக்காரு. கப் அடிக்க வந்தவங்களுக்கு மத்தியில சைட் அடிக்க வந்த இவர் என் இனம். எந்திரன் படத்துல வசி உருவாக்குனா அது ரோபட்டு, ரச்சிதா மேடத்தோட வசீகரத்தால உருவானா அதுதான் ராபர்ட்டு..” என கலாய்த்த குரல், பின்னர் ரச்சிதாவை பார்த்து, “ரச்சிதமே..  ரச்சிதமே.. மாஸ்டர் மனச கலைக்கும் மந்திரமே..” என பாட்டு பாட, ரச்சிதா உட்பட அரங்கமே கலகலப்புடன் சிரித்தது.

Also Read | “அறம் வெல்லும்” - வெளியேறிய விக்ரமன்.. அம்பேத்கர் படத்தை வணங்கி நெகிழ்ச்சி.. bigg boss 6

தொடர்புடைய இணைப்புகள்

bigg boss grand finale fun comments on Robert master and Rachitha mahalakshmi bigg boss 6 tamil

People looking for online information on Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Rachitha, Robert master will find this news story useful.