www.garudabazaar.com
iTechUS

"என்னை பொறுத்தவரைக்கும் அந்த விஷயம்".. ராபர்ட் மாஸ்டரிடம் ரச்சிதா சொன்ன விஷயம்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

I am expecting Friendship from Robert Master says Rachitha

Also Read | "அதை கவனிக்க தவறிட்டோமா?".. அசீம் பத்தி விக்ரமனுக்கு வந்த சந்தேகம்.. மகேஷ்வரி சொன்ன விஷயம்..!

இந்த போட்டி சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், கடந்த வாரம் ADK பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார். இந்நிலையில், ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அசல் கோலார், GP முத்து, மெட்டி ஒலி சாந்தி, ராபர்ட் மாஸ்டர், தனலட்சுமி, மணிகண்ட ராஜேஷ், குயின்சி, ராம், ஷெரினா,  நிவாஷினி மற்றும் மகேஷ்வரி ஆகியோர் கடந்த வாரம் ரீ எண்ட்ரி கொடுத்திருந்தனர்.

இதனால் பிக்பாஸ் வீடு கலகலப்பாக மாறிய நிலையில், வார இறுதி நாட்களில் வழக்கம்போல கமல் தோன்றி கடந்த வாரம் நடைபெற்றவை குறித்து போட்டியாளர்களுடன் உரையாடினார். அப்போது இந்த வாரம் ADK வீட்டில் இருந்து வெளியேறுவதாகவும் கமல் தெரிவித்திருந்தார். இதனால் சக போட்டியாளர்கள் சோகமடைந்தனர்.

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டிற்குள் தற்போது ரச்சிதா, ஆயிஷா ஆகியோர் தற்போது என்ட்ரி கொடுத்துள்ளனர். பிக் பாஸ் வீட்டின் சிறந்த போட்டியாளர்களாக வலம் வந்த இவர்கள் இருவரையும் உள்ளே இருந்த ஹவுஸ்மேட்ஸ் மிக உற்சாகமாக வரவேற்றிருந்தனர். அதிலும் ரச்சிதாவுக்கு மிகவும் நெருங்கிய தோழியான ஷிவின் அவரை கட்டியணைத்து கண்கலங்கியது பலரையும் மனம் உருக வைக்கும் வகையில் அமைந்திருந்தது.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டுக்குள் முட்டை விவகாரம் குறித்து போட்டியாளர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டிருந்தது. மகேஷ்வரியுடன் அசீம் மற்றும் மணிகண்டா பேச, பின்னர் அது வாக்குவாதமாகிவிட்டது. இதனிடையே விக்ரமன் - அசீம் இடையே வாக்குவாதம் நடைபெற சக போட்டியாளர்கள் இருவரையும் சமாதானம் செய்திருந்தனர்.

இதற்கு மத்தியில், சிறந்த போட்டியாளராக வலம் வந்த கதிரவன், பண மூட்டையை எடுத்துக் கொண்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து தற்போது வெளியேறி உள்ளார். அவர் எடுத்த முடிவு மற்றவர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருந்தாலும், தான் எடுத்த முடிவிற்கான காரணத்தையும் கதிரவன் விளக்கி இருந்தார்.

இதனைத் தொடர்ந்து, பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஹவுஸ் மேட்ஸ் மத்தியில் ஒரு போட்டியாளருடன் நட்பை வளர்க்காமல் விட்டு விட்டோம் என நினைத்தால் அவர் கையில் Friendship Band கட்டிவிட்டு நட்பை தொடங்கும்படியும் பிக் பாஸ் அறிவுறுத்தியதாக தெரிகிறது.

அப்படி இருக்கையில், ஒவ்வொரு போட்டியாளர்களும் சக ஹவுஸ்மேட்ஸ் ஒருவருக்கு Friendship Band-ஐ கட்டி அதற்கான காரணத்தையும் தெரிவிக்கின்றனர். இதில் நிவாஷினி ஜிபி முத்துவிற்கும், ஷிவின் அசல் கோலாருக்கும், தனலட்சுமிக்கு ராமும் Friendship Band கட்டி அதற்கான காரணத்தை கூறுவதாகவும் தெரிகிறது. இந்நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

அதில், அமுதவாணன் ஷிவினை பற்றி பேசுகையில் ஆரம்பத்தில் அவரை கண்டு வெறுப்பானதாகவும் பின்னர் நல்ல நண்பர்களாகிவிட்டதாகவும் கூறுகிறார். அவரை தொடர்ந்து பேசும் தனலட்சுமி,"இப்போ கூட அவங்க சொல்லிவிட்டதுனால தான் நல்லா பேசுனேன். ஆனா நீங்க கையில கட்டும்போது அட, அதை ஏன் பண்ணிருக்கணும், எல்லாம் கேம்-காக தானே செஞ்சிருப்பாங்க அப்படின்னு தோணுச்சு. உண்மையாவே உங்ககிட்ட சாரி கேட்டுக்குறேன்" என்கிறார்.

பிறகு ராபர்ட் மாஸ்டர் பற்றி ரச்சிதா பேசுகையில்,"மாஸ்டர் இப்போகூட நான் சொல்றேன். என்னை பொறுத்தவரைக்கும் எதுவுமே தப்பா படல. யாருக்கு யாரை வேணும்னாலும் எந்த நேரத்துலையும் பிடிக்கலாம். இதுக்கு அப்புறம் ஒரு அழகான ஃப்ரண்ட்ஷிப் இருக்கனும்னு விரும்புறேன்" என்கிறார். அப்போது சக போட்டியாளர்கள் கைதட்டி ஆராவாரம் செய்கின்றனர்.

Also Read | "Finals பத்தி யோசிக்கிறீங்களா?".. மகேஷ்வரிக்கு விக்ரமன் கொடுத்த பாசிட்டிவ் பதில்.. BiggBoss

தொடர்புடைய இணைப்புகள்

I am expecting Friendship from Robert Master says Rachitha

People looking for online information on Bigg Boss 6, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Rachitha, Robert master, Vijay tv will find this news story useful.