'மிளகா', 'சேட்டை', 'இரவுக்கு ஆயிரம் கண்கள்', 'பென்சில்' போன்ற படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்தவர் சுஜா வரூணி. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானார்.
![Bigg Boss fame Suja Varunee Posted her Seemandham photos in Instagram Bigg Boss fame Suja Varunee Posted her Seemandham photos in Instagram](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/bigg-boss-fame-suja-varunee-posted-her-seemandham-photos-in-instagram-photos-pictures-stills.jpg)
இதனையடுத்து இவருக்கும் சிவாஜியின் பேரனும், பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான ராம்குமாரின் மகனுமான சிவகுமாரை கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் நடிகை சுஜா வரூணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில், ''இந்த உலகிலேயே சிறந்த மனிதனுக்கு நன்றி.
இந்த வாழ்க்கையில் உண்மையான சந்தோஷம் என்பதை எனக்கு காட்டியவர் ஷிவகுமார் தான் . இவர் தான் நான் உண்மையான பெண்ணாக மாறியதாக என்னை உணரவைத்தார். ஐ லவ் யூ அத்தான். உங்கள் பரிசுகள் எனக்கு எப்பொழுதுமே ஸ்பெஷல்'' என்று குறிப்பிட்டுள்ளார்.