Game Over Others Banner USA
Fakir Other Banner USA

இதுவரை காணாத முற்றிலும் புதிய வேடத்தில் விஜய் சேதுபதி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மக்கள் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'சிந்துபாத்' திரைப்படம் வருகிற ஜூன் 21 ஆம் தேதி வெளியாகவிருப்பதாக கூறப்படுகிறது.  'பண்ணையாரும் பத்மினியும்','சேதுபதி' படங்களுக்கு பிறகு அருண்குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

Vijay Sethupathi to play Keerthy Shetty's father in Uppena

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் அஞ்சலி, விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, விவேக் பிரசன்னா ஆகியோர் நடித்துள்ளனர்.

விஜய் சேதுபதி தெலுங்கில் 'சேரா நரசிம்ம ரெட்டி' படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தில் சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், சுதீப், நயன்தாரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இதனையடுத்து அவர் தெலுங்கில் 'உப்பெனா' என்ற படத்தில்  நடிக்கிறார். இந்த படத்தில் சிரஞ்சீவியின் உறவினர் பஞ்ச வைஷ்ணவ் தேவ் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.

எங்களுக்கு கிடைத்த தகவலின் படி இந்த படத்தில் ஹீரோயினின் அப்பாவாக விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறாராம். மேலும் இந்த படத்தில் அவர் வில்லனாக நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.